3 நாட்கள் ஆலோசனைக்கு பின்னர்.. சேலத்திலிருந்து சென்னை பயணிக்கும் இபிஎஸ்.. இன்று முக்கிய முடிவு?
சென்னை: சேலத்திலிருந்து சென்னைக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
அதிமுகவை சசிகலா தலைமையேற்று நடத்த வேண்டும் என கலகக் குரல் கட்சியில் எழுந்துள்ளது. தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் அதிமுக படுதோல்வி அடைந்தது.
முதல் மூன்று தேர்தல் தோல்விகளுக்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி என கட்சியினர் கூறி வந்தனர். ஆனால் நகர்ப்புற தேர்தலில் பழி போடுவதற்கு யாருமில்லாமல் போய்விட்டனர். காரணம் அதிமுக தனித்தே போட்டியிட்டது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பர் என அதிமுகவினர் நம்பினர்.

கட்சி வளர்ச்சி
ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இதனால் கட்சியின் வளர்ச்சியை ஓபிஎஸ்- இபிஎஸ்ஸும் கெடுத்துவிட்டதாகவும் அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்றும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வகிக்க வேண்டும் என்றும் அது சசிகலாவாக இருக்க வேண்டும் என சில தொண்டர்கள் தங்கள் விருப்பத்கை வெளிப்படுத்தினர். கிருஷ்ணகிரியில் சசிகலாவை ஆதரித்தும் ஓபிஎஸ்- இபிஎஸ்ஸுக்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

சசிகலா தலைமையேற்க வேண்டும்
இந்த நிலையில் தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலா தலைமையேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். இது ஓபிஎஸ் முன்பு நடத்தப்பட்ட தீர்மானம் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிர்ச்சி அடைந்தது. அன்று மறுநாள் முதல் சேலத்தில் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை. தங்கமணி உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வந்தார்.

3 மணி நேரம் ஆலோசனை
இதே போல் அடுத்த நாளும் இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழிதேவன், பாண்டியன், மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வந்து சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

சேலம் டூ சென்னை
இந்த நிலையில் இன்று காலை அவர் சேலத்திலிருந்து சென்னைக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். அவர் இன்று சென்னையில் முக்கிய முடிவை அறிவிப்பார் என தெரிகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்தது, அவரது கைது எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது எல்லாம் ஓபிஎஸ்ஸுக்கு தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி நடத்தியது. சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா நேரில் சந்தித்த விவகாரத்தில் அவரை கட்சியிலிருந்து நீக்க ஓபிஎஸ் கையெழுத்திட்டிருந்தாலும் இன்று ஏதோ முக்கிய அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுகிறார் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேற்று நடைபெறவிருந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டம் ரத்தானது குறிப்பிடத்தக்கது.
-
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications