2 பிளான்கள்.. 2,500 ‘அஃபிடவிட் லெட்டர்’.. அதிரடியாக ஆக்ஷனில் இறங்கிய எடப்பாடி டீம்! அதிமுக பரபர!
சென்னை : அதிமுக தலைமை விவகாரத்தில் வேகமாக முன்னேறி வரும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை சுயவிருப்பதுடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் பிரமாண பத்திரம் பெறும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
2,500-க்கும் மேற்பட்ட அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு பிராமண பத்திரம் பெற்று வருகிறது.
இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையாக ஆதரவு அளிப்பதாக கையெழுத்து பெறப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு முன் இந்த பிரமாண பத்திரம் பெறப்படுவதால், போட்டியின்றி பொதுச் செயலாளராக தேர்வு செய்ததாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.

ரெடியாகும் ஈபிஎஸ் டீம்
அதிமுக பொதுக்குழு கூட்டம், பொதுச் செயலாளர் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இடைக்கால பொதுச் செயலாளரை சுய விருப்பத்துடன் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதிமொழிக் கடிதம் பெற்று வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.

அதிமுக - ஓபிஎஸ் - ஈபிஎஸ்
அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வெற்றியைக் கொடுத்த நிலையில், அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார் ஓபிஎஸ். ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில் உள்ளது. இதற்கிடையே, கட்சிக்குள் தங்களது திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது ஈபிஎஸ் டீம்.

ஈபிஎஸ்ஸின் முயற்சி
கட்சியை தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமி அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகிறார். ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. விரைவில் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆகத் திட்டமிட்டுள்ளார்.

பிரமாண பத்திரம்
ஏற்கனவே பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரை சுயவிருப்பதுடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது ஈபிஎஸ் டீம். 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு பிராமண பத்திரம் பெற்று வருகிறது.

உறுதிமொழிக் கடிதம்
இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையாக ஆதரவு அளிப்பதாக, பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு முன்பு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உறுதிமொழி பத்திரம் பெறும் பணியில் ஈபிஎஸ் டீம் ஈடுபட்டுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளது.

2 திட்டங்கள்
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் பெறப்படும் பிரமாண பத்திரத்தைக் கொண்டு, அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவால் ஒருமனதாக அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிகக்ப்படக்கூடும் என்கிறார்கள்.

டெல்லியில்
மேலும், ஓபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், ஈபிஎஸ் டீம் பெற்று வரும் இந்த பிரமாண பத்திரம் முக்கிய பங்காற்றும் என்றும் கூறப்படுகிறது. முக்கிய புள்ளிகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் அறிவுரைப்படியே இந்த உறுதிமொழி பத்திரத்தை ஈபிஎஸ் டீம் சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications