தமிழ்நாடு vs டெல்லியா.. இது லோக்சபா தேர்தல் அல்ல.. சட்டசபைத் தேர்தல் ஸ்டாலின்.. எடப்பாடி ஆவேசம்!
சென்னை: 2026ல் நடக்கவிருப்பது சட்டசபைத் தேர்தல் என்று தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையிலான தேர்தல் என்று ஸ்டாலின் பேசி இருந்த நிலையில், இது சட்டசபைத் தேர்தல் என்பதே ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பல்லாவரத்தில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சட்டசபைத் தேர்தலின் போது திமுக 525 வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் 4ல் ஒரு பங்கு வாக்குறுதியை கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் 98% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார்.

அப்படியென்றால் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதுவரை வெளியிடப்படவில்லை.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது. இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு முக்கியக் காரணமே போதைப்பொருள் தான்.
அதேபோல் ஆட்சி முடிவடையும் போது அவசர அவசரமாக திட்டங்களை அறிவித்து திறந்து வைப்பது ஏன்? திமுக ஆட்சி முடிவடையும் தருவாயில் அவசர கோலத்தில் விடப்பட்ட டெண்டரை அதிமுக ஆட்சி அமைத்த பின் ரத்து செய்வோம். அதிமுகவை எதிர்க்கும் சக்தி ஆளும் திமுகவுக்கு இல்லை.. எதிர்க்கட்சியாக இருந்தால், பிரதமர் மோடிக்கு கருப்ப பலூன் பறக்கவிடுவார்கள்.
ஆளுங்கட்சியாக இருந்தால் வெள்ளைக் கொடை பிடிப்பார்கள். திமுக எப்போதும் இரட்டை நிலைப்பாடு எடுக்கும். அதிமுக கூட்டணியில் தோழமைக் கட்சிகளுக்கு தான் முக்கியத்துவம், அதேபோல் அரசு நிகழ்ச்சிகளில் கூட முதல்வர் ஸ்டாலின் அரசியல் பேசுகிறார். அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணிக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அந்தக் கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லை..
திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் கமிஷன், கலக்ஷன், கரப்சன்.. நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என்று கூறி ஏமாற்றிவிட்டார்கள். மதுபான விற்பனையில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக பெற்று 5 ஆண்டுகளில் ரூ.24,500 கோடி முறைகேடு செய்துள்ளனர். இந்த தேர்தல் மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டுமென்ற தேர்தல் அல்ல.. சட்டசபைத் தேர்தல்.. இது தெரியாமல் தமிழ்நாட்டிற்கும் என்டிஏ-க்கும் போட்டி என்கிறார் ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications