தயாநிதி மாறன் பற்றி எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தை.. கோர்ட்டில் நடந்த பரபர வாதங்கள்!
சென்னை: திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தன்னை விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த திமுக எம்.பி தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். உண்மைக்கு மாறாகவும் தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாநிதி மாறன் நேரில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என அவரின் தரப்பு வழக்கறிஞர் கோரினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எடப்பாடி பழனிசாமியை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தார். அதற்கு விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், வழக்கு எண்ணிடக் கூடாது எனவே எந்த இந்த மனுவை ஏற்க கூடாது என தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
பின்னர் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு மீது வாதங்கள் நிறைவடைந்த நிலையில் அதன் மீது அக்டோபர் 16 ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்ததா என்பது தொடர்பாக இரு தரப்பும் வாதங்களை அடுத்த விசாரணையின் போது முன் வைக்க உத்தரவிட்ட நீதிபதி ஜெயவேல் விசாரணையை அக்டோபர் 16 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications