பொங்கி எழுந்த ஓபிஎஸ்.. பரபரக்கும் அதிமுக நிர்வாகிகள்! இவ்வளவு நடந்தும் எடப்பாடி அமைதி காப்பது ஏன்
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்த பின்னரே, அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அப்படி எதுவும் நடக்கவில்லை.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்களையும் அதிமுக அப்படியே எதிர்கொண்டது.

அதிமுக
இருந்த போதிலும், அதிமுகவால் தேர்தல்களில் வெல்ல முடியவில்லை. சட்டசபைத் தேர்தலில் 66 இடங்களில் மட்டுமே வென்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் அதைவிட மோசமான தோல்வியை அதிமுக சந்தித்தது. அக்கட்சியின் வாக்குவங்கியும் குறைந்துள்ளது. இடையே அதிமுக மாநிலத்தின் எதிர்க்கட்சியைப் போலச் செயல்படுவதில்லை என்ற பேச்சுகளும் கூட எழுந்தது.

ஒற்றை தலைமை
இதனிடையே திடீரென அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்ற குரல்கள் எழ தொடங்கின. வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கொண்டு வரும் தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கக் கடந்த வாரம் அதிமுக தீர்மான குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தான் ஒற்றை தலைமை குறித்த பேச்சு முதலில் எழுந்து. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் எனச் சிலர் கூறியதாகத் தெரிகிறது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரும் ஒற்றை தலைமை தேவை என்ற ரீதியில் பேசி இருந்தார்.

ஆலோசனை
இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் உடன் தொடர்ந்து தீவிரமாக ஆலோசனை செய்து வந்தார். இப்போது அதிமுகவில் பெரும்பாலான மாசெக்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நேற்று மீண்டும் அதிமுக தீர்மான குழு ஆலோசனைக் கூட்டத்தில் தள்ளுமுள்ளும் அடிதடியும் கூட அரங்கேறியது.

ஓபிஎஸ்
இது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலையே காட்டுகிறது. இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ச்சியாகப் பல முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களையும் சந்தித்து இருந்தார். அப்போது அவர் வெளிப்படையாகவே பல்வேறு விவகாரங்கள் குறித்தும் மனம் விட்டுப் பேசி இருந்தார். அதாவது பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரிமையானது என்று குறிப்பிட்ட அவர், ஜெயலலிதாவுக்குக் கொடுத்த பொதுச்செயலாளர் மரியாதையைக் காலாவதியாக்கினால் அது ஜெ.வுக்கான துரோகம் என்றும் தெரிவித்தார்.

ஓபன் டாக்
மேலும், நானோ, எடப்பாடி பழனிசாமியோ ஒற்றைத் தலைமை குறித்து யாரிடமும் பேசியதே இல்லை என்றார். இத்துடன் நிற்காமல் தொண்டர்களைக் காப்பாற்றத்தான் அதிமுகவில் இருந்து வருகிறேன். கட்சித் தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளித்து இரட்டைத் தலைமையை ஏற்றுக்கொண்டேன். துணை முதல்வருக்கு அரசியல் சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை. இருந்தாலும், பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்று பேசினார்.

மூத்த நிர்வாகிகள்
இதையடுத்து செங்கோட்டையன், தம்பிதுரை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள் எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும மாறிமாறி சந்தித்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை இதில் சமுக முடிவு எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இப்படி பெரும் பரபரப்புக்கு மத்தியில் அதிமுக உட்கட்சி விவகாரம் சென்று கொண்டு இருக்கிறது.

அமைதியோ அமைதி
ஆனால், இவ்வளவு நடந்த பின்னர் எடப்பாடி தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசிக்கத் தயார் என்று ஓபிஎஸ் கூறிய போதிலும், அந்த பக்கத்தில் இருந்து எவ்வித பதிலும் இல்லை. இது கட்சி நிர்வாகிகளுக்குக் கூட குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இது குறித்து சில மாவட்டச் செயலாளர்கள் வெளிப்படையாகவே கருத்து கூறி இருந்தனர்.

நிர்வாகிகள்
நேற்று ஓபிஎஸை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரம்பலூர் மாசெ ராமச்சந்திரன், "ஒற்றை தலைமை கட்சிக்கு ஏன் தேவை என இதுவரை சொல்லவில்லை. இது குறித்து இணை ஒருங்கிணைப்பாளர் மாசெக்களிடமும் கூட எதுவும் சொல்லவில்லை. இப்போது வரை இந்த விவகாரத்தில் அவர் மவுனம் காப்பது ஏன் எனப் புரியவில்லை" என்று கூறி இருந்தார். பேச்சுவார்த்தைக்குத் தயார் என ஓபிஎஸ் அறிவித்த பின்னர் எடப்பாடி மவுனம் காப்பது புரியவில்லை என்றும் இது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

காரணம்
இப்படி கட்சிக்குள் பயங்கர குழப்பம் நிலவி வந்த போதிலும் எடப்பாடி அமைதி காப்பது ஏன் எனப் பலருக்கும் புரியவில்லை. இருப்பினும், நிலைமையை நன்கு புரிந்து பொறுமையாகவே எடப்பாடி ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகிறது. எனவே, எடப்பாடி மவுனத்திற்குப் பின் இருக்கும் பெரிய காரணம் இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்!
-
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications