மாஸ்டர் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி ஆஜர்? அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அவதூறு கேஸில் இன்று விசாரணை
சென்னை: அறப்போர் இயக்கம் தெரிவித்த நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகாருக்கு எதிரான வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி சென்னை ஹைகோர்ட்டில் கடந்த மாதம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் தமிழக அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

புகார்கள்: ஏற்கனவே சாலைகள் நல்ல நிலையில் இருக்கும்போது, புதிதாக சாலை அமைப்பதாக கூறி பணத்தை மோசடி செய்ததாகவும், எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறையில் பல்வேறு முறைகேடுகளை செய்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் தலைமை செயலாளர், நெடுஞ்சாலைத் துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றில் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.
அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தமது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், வேண்டுமென்றே அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி ஆவேசமடைந்தார்.. எனவே, தன்னை பற்றி பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி மான நஷ்ட ஈடுகோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அறப்போர் இயக்கம்: அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்ததுடன், தனக்கு 1.10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க அறப்போர் இயக்கத்திற்கு உத்தரவிடுமாறும் எடப்பாடி கேட்டுக் கொண்டார். இதன் விசாரணையில் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசக் கூடாது என்று அறப்போர் இயக்கத்திற்கு ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது.
அதாவது, பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என சுப்ரீம் கூறியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி குறித்து பேச தடையும் விதிக்கப்பட்டது
இதுதொடர்பான மேல்முறையீட்டில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க இரண்டு நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக கடந்த நவம்பர் 19ம் தேதி எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் காலை ஆஜரானார்.
இன்று வழக்கு: இந்த வழக்கு நீதிபதி மகாலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தரப்பில் சாட்சியம் அளித்தார்.. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, எடப்பாடி பழனிச்சாமி டிசம்பர் 11 ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications