Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எழும்பூர் -செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை பாதிப்பு.. தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு ரயில்வே விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் அறிவிப்பு ஏற்க முடியாதது மற்றும் மிகுந்த கவலையளிக்கிறது. ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்கள், மாணவர்கள் மற்றும் அன்றாடக் கூலித் தொழிலாளர்களுக்கு, புறநகர் ரயில்கள் மட்டுமே மலிவான மற்றும் நம்பகமான போக்குவரத்து.. இந்த முக்கியமான வழித்தடத்தில் சேவைகளைக் குறைப்பது என்பது சாதாரண குடிமக்களின் வாழ்வாதாரத்தின் மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் என கூறியிருந்தார். இதற்கு சென்னை ரயில்வே கோட்டம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழச்சி தங்கப்பாண்டியன் நேற்று வெளியிட்ட பதிவில், "சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் அறிவிப்பு ஏற்க முடியாதது மற்றும் மிகுந்த கவலையளிக்கிறது. ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்கள், மாணவர்கள் மற்றும் அன்றாடக் கூலித் தொழிலாளர்களுக்கு, புறநகர் ரயில்கள் மட்டுமே மலிவான மற்றும் நம்பகமான போக்குவரத்து ஊடகமாக உள்ளன.

Egmore-Chengalpattu electric train service affected Railways explains to Tamilachi Thangapandian

இந்த முக்கியமான வழித்தடத்தில் சேவைகளைக் குறைப்பது என்பது சாதாரண குடிமக்களின் வாழ்வாதாரத்தின் மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதலாகும். இத்தகைய திடீர் குறைப்புகள் மோசமான திட்டமிடலையும், பயணிகளின் நலனில் காட்டும் அலட்சியத்தையுமே பிரதிபலிக்கின்றன. நடுத்தர வர்க்கம் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைச் சிதைக்கும் முடிவுகளை, வெறும் 'வழக்கமான மாற்றங்கள்' என்று ஒதுக்கிவிட முடியாது.

மதிப்பிற்குரிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் அவர்களையும், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் (அவர்களையும் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், உடனடியாக முழுமையான ரயில் சேவைகளை மீண்டும் வழங்க வேண்டும். பொதுப் போக்குவரத்து என்பது ஒரு அத்தியாவசியத் தேவையே தவிர, அது சலுகை அல்ல. நிர்வாகத் தோல்விகளுக்காகச் சென்னை மக்கள் ஒருபோதும் அவதிப்படக் கூடாது" என்று கூறியிருந்தார்.

இதற்கு சென்னை ரயில்வே கோட்டம் அளித்த விளக்கத்தில் "சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில், ₹720 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 2027-க்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினசரி 1.5 லட்சம் பயணிகள் மற்றும் 46 விரைவு ரயில்களை கையாளும் இந்த நிலையத்தில் பின்வரும் வசதிகள் உருவாக்கப்படுகின்றன:

காந்தி இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய இருபுறமும் புதிய G+2 முனையக் கட்டிடங்கள்.

இரு நுழைவாயில்களிலும் G+5 அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள்.

பயணிகள் நெரிசலின்றி செல்ல 72 மீட்டர் அகல மேம்பால நடைபாதை (Elevated Departure Concourse).

அனைத்து நடைமேடைகளிலும் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய 18 மீ மற்றும் 36 மீ அகல நடை மேம்பாலங்கள்.

11 நடைமேடைகளையும் உள்ளடக்கிய 25 மீட்டர் உயர ஒருங்கிணைந்த கூரை.

தற்காலிக ரயில் சேவை மாற்றங்கள் - காரணம் என்ன?

தற்போது 10 மற்றும் 11 ஆகிய நடைமேடைகளில் அடித்தளப் பணிகளுக்காக 45 நாட்கள் தற்காலிக போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மேம்பாட்டு பணிகளுக்கு கனரக இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டியிருப்பதால், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் தற்போது 5 மற்றும் 6 ஆகிய நடைமேடைகளில் இருந்து இயக்கப்படுகின்றன.

நடைமேடைப் பகிர்வு காரணமாக, தினசரி இயக்கப்படும் 102 ஜோடி ரயில்கள் 58 ஜோடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நெரிசல் நேரங்களில் ரயில்களின் இடைவெளி 8 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது.

பயணிகளின் சிரமத்தைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:
பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளது:

கூடுதல் ஷட்டில் சர்வீஸ்கள்: சென்னை எக்மோர், தாம்பரம், புனித தோமையார் மலை மற்றும் கூடுவாஞ்சேரி இடையே 26 கூடுதல் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மாற்றுப் போக்குவரத்து: தடையற்ற பயணத்திற்காக மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்கவும், மெட்ரோ ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டு, ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெறுகின்றன. சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் வாயிலாக உடனுக்குடன் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் நீண்ட கால மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் தற்காலிகமான நடவடிக்கைகள் மட்டுமே. இந்த நவீன உள்கட்டமைப்பு மாற்றத்திற்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்"இவ்வாறு சென்னை ரயில்வே கோட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+