Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாம்பழம் யாருக்கு? பாமக வழக்கில் எதிர்பாராத திருப்பம்.. உயர் நீதிமன்றத்தை நாடிய தேர்தல் ஆணையம்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமகவில் தந்தை- மகன் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. ராமதாஸ் தரப்பு மாம்பழச் சின்னம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், திடீர் திருப்பம் நடந்துள்ளது. பாமக கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட உரிமை இல்லை என ஐகோர்ட் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழ்நாடு தேர்தல் களம் ஒரு பக்கம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் பாமகவில் இன்னுமே உட்கட்சி மோதல் தொடர்ந்து வருகிறது. அங்கு அன்புமணி ஒரு பக்கம், ராமதாஸ் ஒரு பக்கம் என இரு பிரிவுகளாகவே கட்சி இன்னும் இயங்கி வருகிறது. அதேநேரம் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்பதைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருந்தது.

Election Commission PMK case EC Challenges Delhi High court Order Huge Setback for Ramadoss

ராமதாஸ்- அன்புமணி

இருப்பினும், அதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது. தேர்தல் ஆணையத்தில் அன்புமணி போலி ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார் என்றும் அதை ஏற்றே தேர்தல் ஆணையம் அவரை தலைவராக அங்கீகரித்துள்ளது என்றும் கூறியிருந்தார். மேலும், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று ராமதாஸ் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த டெல்லி உயர் நீதிமன்றம், பாமக தலைவர் அன்புமணி என்று சொல்வதற்குத் தேர்தல் ஆணையத்திற்குச் சட்ட அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது. அதாவது பாமக என்பது அங்கீகாரம் பெற்ற கட்சி இல்லை என்பதால் தேர்தல் ஆணையத்தால் பாமக விவகாரத்தில் தலையிட முடியாது எனத் தீர்ப்பளித்தது. மேலும், தேவை ஏற்பட்டால் கட்சி பிரச்சினைக்கு நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது..

மாம்பழச் சின்னம்

இந்தத் தீர்ப்பு வந்த கையோடு மாம்பழச் சின்னத்தைத் தங்கள் தரப்பிற்கு ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமதாஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமதாஸ் நம்பிக்கை

அந்த வழக்கில் தங்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வரும் என்று ராமதாஸ் தரப்பு உறுதியாக நம்புகிறது. இதன் காரணமாகவே கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், மாம்பழச் சின்னம் நிச்சயம் தங்களுக்கே கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். கூட்டணி பேச்சுவார்த்தையை ராமதாஸ் தரப்பு தனியாக நடத்தி வரும் சூழலில், மாம்பழச் சின்னம் கிடைத்தால் அது பிளஸ் பாயிண்டாக இருக்கும் என்றே அவரது தரப்பு கணக்கு போட்டுள்ளனர்.

ட்விஸ்ட்

இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் நடந்துள்ளது. அதாவது பாமக உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு தேர்தல் ஆணையம் மனு அளித்துள்ளது. ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், அங்கீகரிக்கப்படாத கட்சியின் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு தேர்தல் ஆணையம் முறையிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முறையீடு ஏற்கப்பட்ட விசாரணை நடந்தால்.. இதனால் மாம்பழம் சின்னம் வழக்கு விசாரணையும் கூட தள்ளிப் போகலாம். இது ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவையே தரும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+