ஓட்டுப்போட வாங்க மக்கா.. செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி 'காம்போ' அடுத்த ஹிட் ரெடி!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்கள் தவறாமல் ஓட்டுப் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி இணைந்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மெஜாரிட்டி இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று திமுகவும், எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று அதிமுகவும் மல்லுக்கட்டி வருகின்றன.
அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. குறிப்பாக, திமுக, அதிமுக தலைவர்களின் தேர்தல் பிரசாரங்களில் அனல் வீசுகிறது.
இவ்வளவு அனல், வெப்பம் எல்லாம் இருந்தாலும், மக்கள் ஓட்டு போட்டால் தானே மதிப்பு. அது இல்லையெனில், தலைகீழாக நின்றாலும் ஜெயிக்க முடியாது. எனவே, மக்கள் தவறாமல் ஓட்டுப் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
'சூப்பர் சிங்கர்' புகழ் செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி தம்பதி இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். மக்கள் இசைக் கலைஞர்களான இவர்களின் பாடல்களுக்கு என எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அது போல் இந்த தேர்தல் விழிப்புணர்வு பாடலும் பெரும் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"ஓட்டுப்போட வாங்க மக்கா - நாடு மேலும் வளர வாங்க மக்கா" என்று தொடங்கும் இப்பாடல், ரம்மியமான கிராமத்து வயல்வெளிப் பின்னணியில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஓட்டுப் போட வர்றோம் மக்கா!
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications