பொசுக்குன்னு காட்சி மாறுது பாருங்க! இதான் அறிகுறி.. மத்தியில் மாறும் ஆட்சி.. திமுக பிடித்த பாயிண்ட்
சென்னை: இந்தியா கூட்டணி கட்டாயம் ஆட்சியை பிடிக்கும் என்று திமுக அடித்து சொல்ல தொடங்கி உள்ளது. நேற்று நடந்த சம்பவம் ஒன்றை சுட்டி காட்டி திமுக இதை அடித்து சொல்ல தொடங்கி உள்ளது.
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.

கடந்த வாரம் 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது.
நேற்று 6ம் கட்ட தேர்தல் நடந்தது. நேற்று நடந்த ஆறாவது கட்டத் தேர்தலில் எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (UTs) மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நேற்று 6 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் தேர்தலை சந்தித்த 58 தொகுதிகளில் தோராயமாக 61.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இனி கடைசியாக 7ம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன.
விமர்சனம்; இதுவரை நடந்து முடிந்துள்ள 6 கட்ட வாக்குப்பதிவிலும், தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது. வாக்குப்பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பான விமர்சனங்களை அடுத்து, வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளுக்கு தற்போது முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணை நடந்தது. ஆனால் விசாரணையில் இறுதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. 17சி ஃபார்ம் அடிப்படையில் வாக்கு சதவீதத்தை வெளியிடுகிறீர்களா? அதில் ஏதேனும் தேர்தல் ஆணையத்துக்கு பிரச்னை உள்ளதா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இந்த ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை.
வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் முழுமையாக வெளியிடாதது தொடர்பாக எழுந்த தொடர் விமர்சனங்களை அடுத்து, 5 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளின் வாக்குப்பதிவு தொடர்பான முழு விவரங்களையும் தற்போது வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் தொடர்பாகவும் முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
திமுக உறுதி: இந்த நிலையில் இந்தியா கூட்டணி கட்டாயம் ஆட்சியை பிடிக்கும் என்று திமுக அடித்து சொல்ல தொடங்கி உள்ளது. நேற்று நடந்த சம்பவம் ஒன்றை சுட்டி காட்டி திமுக இதை அடித்து சொல்ல தொடங்கி உள்ளது.
இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை செய்துள்ள போஸ்டில் , உச்சநீதி மன்றத்தில் எத்தனை வாக்காளர்கள், எத்தனை பேர் வாக்களித்தார்கள் என சொல்ல முடியாது, சொன்னால் பல பிரச்சனைகள் வெடிக்கும் என உருட்டிய தேர்தல் ஆணையம், பொசுக்கென எல்லா விவரங்களையும் வெளியிட்டு விட்டது. ஏன்? இந்தியா கூட்டணி கட்டாயம் ஆட்சியை பிடிக்கும் என்பதால்தானே , என்று கூறி உள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications