தேர்தல் ஆணையம் கெடுபிடி.. ஒரே நாளில் ரூ.9 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது.. கடும் சோதனை!
தமிழகத்தில் இன்று அதிகாலையில் இருந்து மட்டும் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் இன்று அதிகாலையில் இருந்து மட்டும் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. அதேபோல் தேர்தல் ஆணையமும் மிக தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகிறது.

தேர்தல் காரணமாக தமிழகம் முழுக்க நடத்தை விதி முறைகள் அமலில் இருக்கிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் சோதனையில் ஈடுப்பட்டு வருகிறார்கள். தமிழகம் முழுக்க ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றது.
நேற்று மட்டும் தமிழகத்தில் 2 கோடி ரூபாய்க்கு தங்கமும் , பணமும் கைப்பற்றப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் நடந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
அதிகாலையில் நடந்த சோதனையில் கரூர் ஆண்டிபட்டி அருகே ரூ.5.63 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் ஆணைய அதிகாரிகளின் சோதனையில் சிக்கியது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் இன்னொரு சோதனையில் மதுரையில் ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரையில் வேனில் எடுத்து வரப்பட்ட இந்த ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து சேலம் நோக்கி சென்ற கொரியர் வேனில் இந்த நகைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று அதிகாலையில் இருந்து மட்டும் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications