Election Exclusive: Anti மருமகன் பாலிடிக்ஸ்! அதிமுகவுக்கு தாவும் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார்? பல நாள் ப்ளானாமே! என்னாச்சு?
சென்னை: ஆதவ் அர்ஜுன் மாமியாரும், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியுமான லீமா ரோஸ் மார்ட்டின் இந்திய ஜனநாயக கட்சியில் இணை பொது செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 14 ஆண்டு காலமாக அந்த கட்சியில் பணியாற்றி வந்த நிலையில் சில கசப்பான அனுபவங்கள் காரணமாக கட்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ள நிலையில், அவர் அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் லீமா ரோஸ் மார்ட்டின், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீமா ரோஸ், பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியாவார். இந்திய ஜனநாயக கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும் இருந்து வந்தார். அந்தக் கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
இவரது மகன் ஜோ சார்லஸ், 'லட்சிய ஜனநாயக கட்சி' என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி புதுச்சேரி அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா, தவெக கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார்.

லீமா ரோஸ் மார்ட்டின்
முன்னதாக, ஜோ சார்லஸ் மற்றும் லீமா ரோஸ் இருவரும் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லீமா ரோஸ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தார். அந்த புகைப்படங்கள் வெளியானதும், அவர் அதிமுகவில் இணைந்ததாக தகவல் வேகமாக பரவியது. சமூக வலைதளங்களில், ஒரே குடும்பத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள் என்ற விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், இந்த இணைப்பு குறித்து லீமா ரோஸ் தரப்பிலிருந்தோ அல்லது அதிமுக தரப்பிலிருந்தோ எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் அந்த தகவல் உண்மையா, பொய்யா என்ற குழப்பம் நீடித்து வந்தது.
இந்திய ஜனநாயக கட்சி
இந்த நிலையில், லீமா ரோஸ் மார்ட்டின் இந்திய ஜனநாயக கட்சியில் இணை பொது செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 14 ஆண்டு காலமாக அந்த கட்சியில் பணியாற்றி வந்த நிலையில் சில கசப்பான அனுபவங்கள் காரணமாக கட்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார். இந்நிலையில், லீமா அதிமுகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையைச் சொல்லப்போனால் அதிமுகவில் சேர்வது தான் லீமா ரோஸ் மார்டினின் நீண்டகால திட்டம் என சொல்லப்படுகிறது.
அதிமுக இணைப்பு
பாஜகவில் இருந்த போதும் அதற்குப் பிறகு ஐஜேகேவில் இருந்த போதும் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னணி இருந்தாலும் தேர்தல் அரசியலில் வெல்ல முடியவில்லை என்ற ஏக்கம் லீமா ரோஸ் மார்ட்டினுக்கு நீண்ட காலமாகவே இருந்தது. அதனால்தான் அதிமுக கட்சியில் சேர வேண்டும் என திட்டமிட்டு வந்தார். அதே நேரத்தில் தனது மகன் புதுச்சேரி அரசியலில் தீவிரமாக களம் இறங்கி இருக்கும் நிலையில்,மருமகன் ஆதவ் அர்ஜுனா எதிர் முகாமான தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றார். தமிழக அரசியலில் கவனம் செலுத்த நினைத்த லீமா ரோஸ் முதலில் தவெகவில் இணையதான் திட்டமிட்டு இருந்தார் என சொல்லப்படுகிறது.
ஆதவ் அர்ஜுனா
ஆனால் ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருந்த அவர் அதிமுகவில் இணையும் திட்டத்தை கையில் எடுத்தார். அதை ஒட்டியே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தும் பேசி இருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அரசியல் சந்திப்பு அல்ல மரியாதை நிமித்தமான சந்திப்பு என லீமா ரோஸ் விளக்கம் அளித்திருந்தார்.
2026 தேர்தல்
இதற்கிடையே அதிமுக சார்பில் 2026 தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டபோது லீமா ரோஸ் மார்ட்டின் திருவாடானை தொகுதியில் போட்டியிட விருப்பமுனை தாக்கல் செய்த தகவலும் வெளியானது. ஐஜேகேவில் பொறுப்பில் இருக்கும் ஒருவர் எப்படி விருப்பமான தாக்கல் செய்தார் என்ற கேள்வியும் தமிழக அரசியலில் எழுந்தது. இந்த நிலையில் லீமாவுக்கு தெரிந்த அதிமுகவினர் அந்த விருப்ப மனு தாக்கல் செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் தான் பணிக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து லீமா ஐஜேகேவில் இருந்து வெளியேறியிருக்கிறார். விரைவில் அவர் அதிமுகவிலும் இணைய போகிறார். மருமகனின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருக்கும் அவர் அவரை எதிர்த்து அரசியல் செய்வதற்காகவே அதிமுகவில் இணைய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications