Election Exclusive: தம்பிக்கு தரமான பதவி.. மகனை ‘மாண்புமிகு’ ஆக்கனும்! தேமுதிகவை திணற வைக்கும் அண்ணியார்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அதிமுக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஓரளவு செட்டிலாகி விட்டன. ஆனால், ஆற்றில் ஒரு கால்.. சேற்றில் ஒரு கால்.. என்பது போல எந்தப் பக்கம் சாய்வது என தெரியாமல் குழம்பி நிற்கிறது தேமுதிக. தம்பியை மத்திய அமைச்சர் ஆக்க வேண்டும், மகனை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்ற தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டமே இவ்வளவு இழுபறிக்கும் காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, தமிழ்நாட்டின் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுகவும், மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவும் தீவிரமாக தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டன.
கடந்த தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்த கூட்டணியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன், தேவையான இடங்களில் புதிய கட்சிகளையும் இணைத்துக்கொள்ள திமுக திட்டமிட்டு வருகிறது. மறுபுறம், அதிமுகவும் வலுவான கூட்டணி அமைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தேமுதிக கூட்டணி
இந்த அரசியல் சூழலில், தேமுதிக தற்போது "மதில் மேல் பூனை" போல எந்தப் பக்கம் சாய்வது என்ற முடிவை எடுக்காமல் நிற்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தமிழகம் முழுவதும் பரவலாக ஒரு அளவு வாக்கு வங்கி இருப்பதால், தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள திமுகவும் அதிமுகவும் ஆர்வம் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக இரு தரப்புகளுடனும் பேசிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதுகுறித்து திமுகவும் அதிமுகவும் வெளிப்படையாக அதிகம் பேசாமல், "நேரம் வரும் போது முடிவு தெரியும்" என்ற ரீதியிலேயே பதிலளித்து வருகின்றன. ஆனால், தேமுதிக தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்ட தேதிகளிலும் கூட கூட்டணி முடிவு வெளியாகாதது, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தல்
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் சேர வேண்டும் என்பதை தேமுதிக தள்ளிப் போட்டு வருவதற்கு முக்கிய காரணமாக மாநிலங்களவை சீட் விவகாரம் சொல்லப்படுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது, அதிமுக தங்களுக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்குவதாக உறுதி அளித்ததாக தேமுதிக கூறி வந்தது. அந்த அடிப்படையில், 2025 மாநிலங்களவைத் தேர்தலில் அந்த இடத்தைப் பெற வேண்டும் என தேமுதிக எதிர்பார்த்தது. ஆனால், அப்போது அதிமுகவுக்கு கிடைத்த இரு மாநிலங்களவை இடங்களுக்கும் அக்கட்சியே வேட்பாளர்களை நிறுத்தியது.
தேமுதிக தலைமை
இதுகுறித்து அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, "2026 மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு வாய்ப்பு வழங்கப்படும். தேமுதிக அதிமுக கூட்டணியில்தான் தொடர்கிறது" என்று விளக்கம் அளித்தார். இருப்பினும், அந்த விளக்கம் தேமுதிக தலைமைக்கு முழுமையான நம்பிக்கையை அளிக்கவில்லை என்பதே அரசியல் வட்டாரங்களின் கருத்தாக உள்ளது.
மக்கள் விரும்பும் கூட்டணி
இதற்கிடையே, ஜனவரி மாதம் நடைபெற்ற தேமுதிக கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு பேசிய பிரேமலதா விஜயகாந்த், "சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. கூட்டணி முடிவு கட்சியின் மாநாட்டில் அறிவிக்கப்படும்" என்று கூறினார். ஆனால், ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்ற தேமுதிக மாநாட்டிலும், பிப்ரவரி 3-ஆம் தேதி அறிவிப்பதாக கூறிய நாளிலும் எந்த முடிவும் வெளியாகவில்லை. பின்னர், "இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு மக்கள் விரும்பும் கூட்டணியை அறிவிப்போம்" என்று பிரேமலதா தெரிவித்தார். பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், அதற்குப் பிறகே தேமுதிக முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திமுக அதிமுக
தேமுதிக கேட்கும் அளவுக்கு அதிக தொகுதிகளை வழங்க திமுகவும் அதிமுகவும் தயங்குகின்றன என்பதே இந்த இழுபறியின் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு கிடைக்கும் அனுதாப வாக்குகளே தற்போது தேமுதிகவின் பிரதான பலமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வாக்குகள் வரை தேமுதிக பெற்றாலும், நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில் அந்த வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியமானதாக மாறலாம். அதனால்தான், இரு பெரிய கட்சிகளும் தேமுதிகவை முழுமையாக புறக்கணிக்க முடியாமல் இருக்கின்றன.
அதிக தொகுதி
அதே நேரத்தில், தேமுதிக இடதுசாரி கட்சிகளைவிட அதிக தொகுதிகளை கோருவது திமுகவுக்கு சிக்கலாக உள்ளது. அதிமுக தரப்பிலும், கடந்த முறை போல வாக்குறுதி கொடுத்து பின்னர் ஏமாற்றிவிடுவார்களோ என்ற அச்சம் தேமுதிகவுக்கு இருக்கிறது. தனித்து போட்டியிடும் முடிவை தேமுதிக எடுத்தால் அது அரசியல் ரீதியாக தற்கொலைக்கு சமம் என்பதையும் கட்சி நிர்வாகிகள் நன்கு உணர்ந்துள்ளனர்.
விஜயகாந்த்
விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக எதிர்கொள்ள இருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. தொண்டர்களிடையே ஒரு அளவு சோர்வு இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வர முயற்சி நடக்கிறது என தேமுதிக கூறுகிறது. ஆனால், சுதீஷை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்ற பிரேமலதாவின் விருப்பமும், அதற்கான அரசியல் கணக்குகளுமே இந்த கூட்டணி இழுபறிக்கு முக்கிய காரணம் என அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். தேர்தல் தேதி நெருங்கும் போது, தேமுதிக எந்தப் பக்கம் சாயும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?










Click it and Unblock the Notifications