Election Exclusive: அக்கா வாங்க.. கனிமொழியை ’லோக்கல்’ அரசியலுக்கு அழைக்கும் உ.பி.கள்! தொகுதி மாறும் ஸ்டாலின்? உதயநிதி?
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் பணிகளை முழு வேகத்தில் முன்னெடுத்து வருகிறது. தற்போது வேட்பாளர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணியும் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஆயிரம் விளக்கு, உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்திலும், திருச்செந்தூரில் கனிமொழியும் போட்டியிட வேண்டுமென திமுகவினர் அதிகமாக விருப்பம் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தலைவர்கள் வரும் தேர்தலை தொகுதி மாறுவார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் 2026 சட்டமன்ற தேர்தல் சென்று கொண்டிருக்கும் நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது தேமுதிக. கட்சி ஆரம்பித்து 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன் முறையாக இந்த கூட்டணி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட நான்கு முக்கிய அணிகளுக்கிடையே நேரடி போட்டி உருவாகும் சூழல் உள்ளது. அதனால் கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு போன்ற பணிகள் வேகமெடுத்து வருகின்றன.

2026 சட்டமன்ற தேர்தல்
திமுக ஏற்கனவே கனிமொழி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பை தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த முறையும் பெரிய கூட்டணிப் பலத்துடன் தேர்தலை சந்திக்கத் திமுக முயற்சி செய்து வருகிறது. தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், தவாக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு வெளியிலும் சில சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக வேட்பாளர் தேர்வு
இந்நிலையில் திமுக கூட்டணி இன்னும் விரிவடையும் எனவே சொல்லப்படுகிறது. மேலும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த திமுக தலைமையிலான பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு தலைமை தாங்கும் இந்த குழுவில், ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்ட பல அமைச்சர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். கூட்டணி விரிவாக்கம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணியும் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
திமுக விருப்ப மனு
திமுக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், 1000 ரூபாயை செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். பொதுத் தொகுதியில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் 25,000 ரூபாயையும், தனித் தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் 15 ஆயிரத்தையும் டெபாசிட்டாக செலுத்த வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் கட்சிப் பொறுப்புகள், அரசியல் அனுபவம், போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற வரலாறு உள்ளிட்டவை கேட்கப்பட்டுள்ளது.
ஆயிரம் விளக்கு ஸ்டாலின்
இந்த சூழலில், கட்சியினரால் தாக்கல் செய்யப்பட்ட சில விருப்ப மனுக்கள் அரசியல் வட்டாரத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என கட்சியினர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதேபோல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்செந்தூர் தொகுதியில் கனிமொழி களம் இறங்க வேண்டும் என விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கனிமொழி சட்டமன்றம்
தற்போது தூத்துக்குடி எம்பியாக இருக்கும் கனிமொழி மாநில அரசியலுக்கு திரும்ப வேண்டும். குறிப்பாக திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் விருப்பம் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். சார் நடவடிக்கையால் ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என்பது தான் மு.க.ஸ்டாலினின் எண்ணம். ஆனால் ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஏராளமான திமுகவினர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின்
அதே நேரத்தில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என விருப்பம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இது கட்சி தொண்டர்களின் எண்ணம் மட்டுமே என்றும் தொகுதி மாறும் திட்டத்தில் தலைவர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் முதன்முறையாக மாநில அரசியலுக்கு கனிமொழி திரும்பலாம் எனவும் சொல்லப்படுகிறது.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!











Click it and Unblock the Notifications