Election Exclusive: லிஸ்ட் எடுத்த ஸ்டாலின்.. மொத்தமாக தூக்கி அடிக்கப்படும் அதிகாரிகள்.. தேர்தல் பிரம்மாஸ்திரம்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் 50- 60 நாட்களில் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நிர்வாக ரீதியிலான அதிரடி மாற்றங்களைத் தொடங்க உள்ளது. அரசு இயந்திரத்தை முடுக்கிவிடவும், மக்கள் நலத்திட்டங்களை விரைந்து கொண்டு சேர்க்கவும் ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள் மட்டத்தில் பெரும் இடமாற்றங்கள் செய்யப்பட உள்ளனர்.

நிர்வாக மாற்றத்தின் பின்னணி
கடந்த சில மாதங்களில் மட்டும், 38-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் (SP) மட்டத்தில் இந்த மாற்றங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன. கோயம்புத்தூர், தேனி போன்ற முக்கிய மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் மேலும் அதிகாரிகள்.. முக்கியமாக சென்னையில் உள்ள பலர் மாற்றம் செய்யப்பட உள்ளனர். TNPSC குளறுபடி காரணமாக.. மேலும், டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் வெங்கடப்பிரியா ஐஏஎஸ் நியமிக்கப்பட உள்ளார்.
ஏன் இந்த அதிரடி மாற்றங்கள்?
முதலமைச்சர் இந்த மாற்றங்களைச் செய்வதற்குப் பின்னால் மிக முக்கிய மூன்று காரணங்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்:
அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல்: கடந்த நான்கு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட 'புதுமைப் பெண்', 'மக்களைத் தேடி மருத்துவம்' போன்ற முக்கியத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய, சுறுசுறுப்பான மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை முக்கியப் பொறுப்புகளில் ஸ்டாலின் அமர்த்துகிறார்.
எதிர்க்கட்சிகளின் சவால்களைச் சமாளித்தல்: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மற்றும் புதிதாகக் களம் இறங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆகிய கட்சிகளின் அரசியல் நகர்வுகளைச் சமாளிக்க, சட்டம்-ஒழுங்கைத் பலப்படுத்துவது அவசியம். இதற்காகவே காவல்துறை உயரதிகாரிகள் மட்டத்தில் பெரிய அளவில் பதவி உயர்வு மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நிர்வாகத் திறனை மேம்படுத்தல்: 2026-ல் சுமார் 300 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே திறமையான இளம் அதிகாரிகளுக்கு முக்கியத் துறைகளை வழங்கி, தேர்தலுக்கு முன் எவ்விதத் தொய்வும் இல்லாமல் நிர்வாகத்தை நடத்த முதல்வர் திட்டமிட்டுள்ளார். சிலர் எதிர்கட்சிகளுடன் நெருக்கமாக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்
நிர்வாக மாற்றத்தில் மற்றொரு மைல்கல்லாக, ஜே. ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட நான்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது. அரசின் சாதனைகளை மக்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்கவும், தவறான தகவல்களை முறியடிக்கவும் இந்தத் தனித்துவமான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதிலும் சிலர் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வருகிறது. சென்னை கோட்டையில் மாற்றப்படும் சில அதிகாரிகள்.. இதுவரை நல்ல பவர் இருந்த அதிகாரிகள் என்று கூறப்படுகிறது.
இதனால் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு சீக்ரெட் கசிவது, சிலர் எதிர்கட்சிகளுக்காக வேலை செய்வது போன்ற விஷயங்கள் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications