வீடுகளுக்கு மின் கட்டணம் 80% உயரும்.. மத்திய அரசின் புதிய சட்ட திருத்தம்.. எச்சரிக்கும் பொறியாளர்கள்
சென்னை: தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், 6-வது முறையாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்தத்தை கொண்டு வர இருக்கிறது.இந்த சட்ட திருத்தம் ரயில்வே, மற்றும் தனியார் உற்பத்தி தொழில்களுக்கான மின்சாரத்தின் விலையை 20 சதவீதம் குறைப்பதுடன், வீட்டு உபயோக மின் கட்டணத்தை 80 சதவீதம் உயர்த்தும். இதனால், மின்சாரம் என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் அச்சம் உள்ளது என்றார்.
2022ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மின்சாரச் சட்டத் திருத்தப்படித்தான் மின் கட்டணங்கள் ஆண்டு தோறும் உயர்ந்து வருகின்றன. புதிய சட்டத் திருத்தத்தின் முக்கிய அம்சங்களின்படி, மாநிலங்களின் அதிகாரங்களில் மாற்றம் ஏற்படுவதால் கட்டண உயர்வை மாநிலங்களில் கூட தடுக்க முடியாது என்பதால் கட்டணம் உயருகிறது.

இந்தச் சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கம் மின் விநியோகத் துறையில் போட்டியை அறிமுகப்படுத்துவது மற்றும் நிதி நிலைமையைச் சீராக்குவது தான். பல மாநிலங்களில் மின்சாரவாரியம் கவலைக்கிடமான நிலையில் உள்ளன. இதனால் மின் கட்டணத்தை சரி செய்வதற்கு ஏதுவாக ஆண்டு தோறும் கட்டணத்தை உயர்த்துவது உள்பட பல்வேறு சீர்திருத்தங்கள் உள்ளதால், மின் கட்டணம் உயரும் அச்சம் உள்ளது
புதியசட்ட திருத்தப்படி, ஒரே விநியோகப் பகுதியில் பல நிறுவனங்கள் செயல்படும். தற்போதைய நிலையில் ஒரே ஒரு நிறுவனமாக தமிழ்நாடு மின்சார வாரியம் இருக்கிறது. ஆனால் புதிய திட்டப்படி, ஒரே பகுதியில் பல தனியார் விநியோக நிறுவனங்கள் செயல்படும். தனியார் நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்படும் என்பதால், பெரிய நகர்ப்புற நுகர்வோரை மட்டுமே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மின்சாரம் வழங்க முயற்சிப்பார்கள்.
இதனால் தமிழ்நாடு அரசு மின் வாரியம் உள்பட அரசு மின்வாரியங்கள் லாபம் குறைவான, கிராமப்புற நுகர்வோருக்கும், இலவச மின்சாரம் பெறுபவர்களுக்கும் மட்டுமே மின்சாரம் வழங்கும் நிலை ஏற்படும். இது, அரசு மின் வாரியங்களின் நிதிச் சுமையை அதிகரித்து, இறுதியில் மற்ற பிரிவினருக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இன்னும்தெளிவாக சொல்வது என்றால், அரசு மின் நிறுவனங்களை குறைந்த கட்டணத்தை முதலில் அறிமுகம் செய்வது, அனைத்து பணக்காரர்களையும் தங்கள் பக்கம் தனியார் மின்வாரியங்கள் இழுத்துவிடும். அப்படி செய்த பின்னர், அரசு மின்வாரியங்களால், மானிய விலையில் மின்சாரம் வழங்க முடியாமல் போகும். இறுதியாக சிக்கலான நிலை ஏற்படும்.
ஏனெனில் தற்போதைய நிலையில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களிடம் அதிக கட்டணம் வசூலித்து, அதன் மூலம் வரும் வருவாயை விவசாயம் மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கான மானியங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் புதிய சட்டம் காரணமாக குறுக்கு மானியங்கள் அடியோடு நின்றுவிடும்.. ஒவ்வொரு பிரிவினருக்கும் உண்மையான செலவின் அடிப்படையில் கட்டணம் வசூலிப்படும். இப்படிப்பட்ட குறுக்கு மானியம் நீக்கப்பட்டால், தற்போது குறைந்த கட்டணத்தில் மின்சாரம் பெறும் விவசாயிகள் மற்றும் வீட்டு உபயோகிப்பாளர்களின் மின் கட்டணம் கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளது.
இதுபற்றி சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில், தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், 6-வது முறையாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்தத்தை கொண்டு வர இருக்கிறது. கடந்த 5 திருத்தங்களையும் அனைத்து மாநிலங்களும் கடுமையாக எதிர்த்ததால் கைவிடப்பட்டன. தற்போது கொண்டு வரும் சட்டதிருத்தம் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொதுத்துறை வினியோக நிறுவனங்களின் சொத்துகளை தனியாருக்கு விற்க வழிவகுத்துவிடும்.
மேலும், இந்த சட்ட திருத்தம் ரயில்வே, மற்றும் தனியார் உற்பத்தி தொழில்களுக்கான மின்சாரத்தின் விலையை 20 சதவீதம் குறைப்பதுடன், வீட்டு உபயோக மின் கட்டணத்தை 80 சதவீதம் உயர்த்தும். புதிய சட்டத்திருத்தங்களுக்கு, வினியோக நிறுவனங்களின் கடனை மத்திய அரசு காரணமாக காட்டுகிறது. ஆனால், வினியோக நிறுவனங்களின் நஷ்டத்திற்கு மத்திய அரசு தனியாருக்கு சாதகமாக வகுத்த மின்சார கட்டணக் கொள்கைகளும், விதிகளுமே காரணம். ஏற்கனவே, மின்துறையில் உற்பத்தி நிறுவனங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போது வினியோக நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால், மின்சாரம் என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் அச்சம் உள்ளது. எனவே, மத்திய அரசு மின்சார சட்ட திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும். தமிழக அரசு இந்த சட்ட திருத்தத்தை ஏற்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? என்று தெளிவுப்படுத்த வேண்டும்" இவ்வாறு தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications