கண்ணை கட்டுதே.. மின்சார வாரியம் டக்குனு தந்த ஷாக்.. இனிமே இப்படித்தான்.. பறந்து வந்த டெல்லி வார்னிங்
சென்னை: கடன் ஒருபக்கம் இருந்தாலும், மின் தேவையை சமாளிக்க முடியாமல் தமிழக அரசு திணறி கொண்டிருக்கிறது.. இருந்தாலும், கூடுமானவரையில், தமிழக மக்களின் மின்தேவையை பூர்த்தி செய்தும் வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், ஒரு முக்கிய எச்சரிக்கையை மத்திய அரசு விடுத்துள்ளது. அது என்ன?
தமிழகத்தை பொறுத்தவரை, மின்தேவை என்பது, தினமும் காலை மாலையில் சராசரியாக 15000 மெகா வாட்டாகவும், மற்ற நேரங்களில் 14000 மெகா மெகா வாட்டாகவும் உள்ளது. ஆனால், இவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைப்பதில்லை.. அதனாலேயே மத்திய மின் நிலையங்கள், தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

அதிகரிப்பு: எனினும் இந்த வருடம், குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதமான கோடையில், மின் தேவையானது, எப்போதும் இல்லாத வகையில் அளவுக்கு அதிகரித்தது.. அதாவது, 19387 மெகா வாட்டாக அதிகரித்தது.
அதாவது, தமிழகம் முழுவதும் உச்சபட்ச மின்நுகர்வு ஏறத்தாழ 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்திருந்தது.. சென்னையில் மட்டுமே, ஒருநாள் மின்நுகர்வு 423 மில்லியன் யூனிட் அளவுக்கு அதிகரித்து காணப்பட்டது..
மின்தேவை அதிகரிப்பு: இது கடந்த 2019-20-ம் ஆண்டில் 369 மில்லியன் யூனிட் அளவு மட்டுமே இருந்தது. இப்படி மின்தேவை அதிகரித்துள்ள போதிலும், கூடுமான வரையில், பாதிப்பு இல்லாமல், தமிழகம் முழுவதும் சீரான மின்விநியோகம் செய்யப்பட தமிழக அரசு முயற்சிகளை முன்னெடுத்தது. இதற்கு காரணம், அதே அளவு மின் உற்பத்தியும் கொள்முதலும் இருந்ததால் பற்றாக்குறை பெரிதாக ஏற்படவில்லை. இப்போது கோடை வெயில் முடிந்த நிலையில் மின் தேவையானது, 16500 மெகா வாட்டாக இருக்கிறது.
இதனிடையே, ஒவ்வொரு மாநிலத்திலும் வரும் மாதங்களில் அதிகரிக்க போகும், மின் தேவை மின் உற்பத்தி பற்றாக்குறை உள்ளிட்ட விபரங்களை மாநில மின் வாரியங்களுக்கு, மத்திய அரசு முன்கூட்டியே தெரிவித்து வருகிறது.. இப்படி எச்சரித்து விடுவதுடன் மட்டுமல்லாமல், மின் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளைம் அறிவுறுத்துவது வழக்கம்.
வார்னிங்: அப்படித்தான், இப்போதும் ஒரு வார்னிங் + அட்வைஸ் என இரண்டுமே சேர்ந்து மத்திய அரசிடமிருந்து வந்துள்ளது.. அதன்படி 2024 ஜனவரியில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் 2350 மெகா வாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்படும் என்று மத்திய மின் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "கோடை காலத்தில் மின் தேவை வழக்கத்தை விட அதிகரிப்பது வழக்கம். அதனால், 2024 கோடை தேவையை சமாளிக்க, பரிமாற்ற முறையில் அடுத்த வருடம் மார்ச் 1 முதல் மே 31 வரை மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தம் செய்ய அழைப்பு விடப்பட்டுள்ளது. குறுகிய கால மின் கொள்முதலுக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது..
கிலி கிளம்பியது: மே முதல் காற்றாலை சீசன் துவங்கும்.. பரிமாற்ற முறையில் எவ்வளவு மின்சாரம் வாங்கப்படுகிறதோ அது ஜுன் 10 முதல் செப்டம்பர் 10ம் தேதிக்குள் திருப்பி வழங்கப்படும்" என்றார். மின் பற்றாக்குறை நமக்கு வரப்போவதாக மத்திய அரசு சொல்லிஉள்ளது, இப்போதே கிலியை கிளப்பி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications