"கரண்ட் பில்" ஜாஸ்தியா வருதா? ரீடிங்கில் வருகிறது மாற்றம்.. தமிழக மின்சார துறையின் "ஸ்மார்ட் திட்டம்"
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், கரண்ட் பில் கணக்கீட்டில் புது மாறுதல் துவங்கப்படுகிறது. இதற்கான முன்னெடுப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) கையில் எடுத்து வருகிறது.. என்ன அது?
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது... இப்போது, அதாவது இந்த ஜூலை முதல், பணவீக்கத்தைக் கணக்கிட்டுக் கட்டணத்தை உயர்த்தும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மின்கட்டணம்: ஆனால், வீடுகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு தரப்பட்டுள்ளது... எனினும், தொழில் நிறுவனங்களுக்கு கட்டணம் உயரும்போது அது மறைமுகமாக எல்லாவற்றின் விலைவாசியிலும் எதிரொலிக்கவே செய்யும்.. இந்த மின் கட்டண உயர்வானது, அப்பார்ட்மென்ட்களில் பொதுப்பயன்பாட்டிற்கான மின் இணைப்பு கட்டணத்துக்கும் இந்த உயர்வு பொருந்தும் என்பதால், மக்கள் வெகுவாகவே அதிருப்திக்கு உள்ளாகி உள்ளார்கள்.
இந்நிலையில்தான், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழக அரசு வேகப்படுத்தி உள்ளது.. மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாக சமீபத்தில் நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.. இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் "ஸ்மார்ட்' மீட்டர்" திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு: ஸ்மார்ட் மீட்டர் என்றால் என்ன? இந்த திட்டத்தின் கீழ் மீட்டரில் மின் பயன்பாடு தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.. பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக "சர்வர்" உடன் இணைக்கப்படும். இதனால் மின் பயன்பாட்டை தானாகவே ஸ்மார்ட்' மீட்டர் கணக்கெடுத்துவிடும். அதுவும் துல்லியமாக மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் . அதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்க வேண்டியதில்லை.. அதற்கான கட்டண விவரம் sms மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும்.
வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் போன் கூட செய்ய தேவையில்லை. அதை மின்வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே தெரிந்து கொள்ள முடியும். இது போன்றவற்றை ஸ்மார்ட் மீட்டர் மூலமாக கிடைக்கும் நன்மைகளாகும்.வரும் 2025ம் ஆண்டுக்குள் அனைத்து வீடு, வணிக இடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.. அந்தவகையில், கடந்த மாதம், முதல்கட்டமாக 9 மாவட்டங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த சர்வதேச டெண்டரையும் அரசு கோரியிருந்தது.

ஸ்மார்ட் மீட்டர்கள்: இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு நுகர்வோருக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணியை விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு வசதியாக இது மூன்று தனித்தனி தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.. அதன்படி,
முதல் தொகுப்பானது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், தர்மபுரி மற்றும் பிற வட மாவட்டங்கள் உட்பட 13 மாவட்டங்களை உள்ளடக்கியது. சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை தி.நகரில் 1.1 லட்சம் மீட்டர்களை டாங்கெட்கோ ஏற்கனவே நிறுவியிருக்கிறது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
2 தொகுப்புகள்: அதேபோல, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, கரூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மின்வாரியங்களுக்கு 2 தொகுப்புகள் ஏற்கனவே, முடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய மூன்றாவது தொகுப்புக்கான டெண்டர் விரைவில் ஆரம்பமாக போவதாக சொல்கிறார்கள்..
19,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், இந்த ஆண்டடே தொடங்கப்பட்டு, வரும் மார்ச் 2025க்குள் முடிக்கப்பட உள்ளதாக காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புது புரட்சி: ஆனால், கரண்ட்பில்லில் மாறுபாடுகள் தொடர்ந்து வருவதால், இந்த மீட்டர் பொருத்தும்பணியை விரைவில் துவங்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் கிளம்பி உள்ளன. ஸ்மார்ட் மீட்டர்கள் அறிமுகமாவது, தமிழகத்தில் எரிசக்தி துறையில் புரட்சியை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாகவும் நம்பப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications