'என் சென்னை யங் சென்னை' முன்னெடுப்பு! தொடங்கி வைத்த சசிகாந்த் செந்தில் எம்.பி
சென்னை: சென்னையை மையமாக கொண்டு பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் 'என் சென்னை யங் சென்னை', தற்போது அதன் மூன்றாவது பதிப்பை அறிமுகப்படுத்துகிறது. இந்த நிகழ்வை நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தொடங்கி வைத்திருக்கிறார்.
சென்னை பெருநகரமும், அதன் வாழ்க்கைச் சூழல்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்று சேர்ந்து உழைக்கும் சென்னை இதயங்களின் உணர்வைக் கொண்டாடும் ஒரு முயற்சியாக 'என் சென்னை யங் சென்னை' செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு செயல்பாடுகளில் சென்னையை கட்டமைத்து வரும் கவனம் பெறாத சாமானிய மக்களை இது அடையாளம் கண்டு வருகிறது.

இப்படி இருக்கையில், இந்த ஆண்டு 'சென்னையின் அன்புக்காக' எனும் நிகழ்வை கடந்த 15ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தொடங்கி வைத்திருக்கிறார். சென்னையின் நிலையான எதிர்காலத்திற்காக, தலைமுறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பில் தனித்துவமான கவனம் செலுத்துவதன் மூலம் அதன் மூன்றாவது பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழலை மேம்படுத்தும் அதே வேளையில், அனைத்து வயதினரும் நகரின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இந்த நிகழ்வில் சிறு குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, தங்கள் தாத்தா பாட்டிகளிடமிருந்து சென்னை குறித்த பூர்வீக அறிவை பெறுவார்கள்.
அதேபோல சென்னையில் பிளாஸ்டிக் ஒழிப்புக்காக மூத்த குடிமக்கள் நடைப்பயணம் மேற்கொள்கின்றனர். இப்படியான நிகழ்வுகள் மூலம் நகரின் வளர்ச்சியில் அங்கமாக இருக்கும் அனைத்து வயதினரையும் 'என் சென்னை யங் சென்னை' அங்கீகரிக்கிறது. இது சமூகத்தை வளர்ப்பதற்கும், மாற்றத்தை தூண்டுவதற்கும், சென்னைக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொள்கிறது.
-
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications