அதிகாலையிலேயே வந்த அமலாக்க துறை.. சென்னையில் 10+ இடங்களில் அதிரடி ரெய்டு.. என்ன மேட்டர்
சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை தொடங்கிய இந்த ரெய்டு பல மணி நேரமாக தொடர்ந்து நடந்து வருகிறது
கடந்த சில காலமாகவே தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் அமலாக்க துறை சோதனை தொடர்ந்து அவ்வப்போது நடந்து வருகிறது. அதிலும் லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அமலாக்க துறை ரெய்டு மேலும் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது.

ரெய்டு: இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தி வருகிறார்கள். சென்னை புறநகர்ப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் உள்ள இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மொத்தம் 8 வாகனங்களில் வந்த அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள அந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்க துறை ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
மும்பை நிறுவனம்: அந்த மும்பை நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் உள்ள மற்ற நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது. காலை தொடங்கிய இந்த ரெய்டு பல மணி நேரமாக தொடர்ந்து நடந்து வருகிறது
எந்த காரணத்திற்காக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், சோதனை முழுமையாக நடந்து முடிந்த பிறகு ரெய்டு குறித்த தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications