கெஜ்ரிவால் இருக்கட்டும்! இங்கே ரெய்டு விடுங்க! டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய தமிழக பாஜக "தலைகள்".. ஏன்?
சென்னை: டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழக பாஜகவோ, தமிழகத்தில் ரெய்டுகள் நடக்க வேண்டும் என தேசிய தலைமைக்கு அறிவுறுத்தியிருக்கிறதாம்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த வாரம் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கலும் தொடங்கி விட்ட நிலையில் ஒவ்வொரு கட்சியும் வேகமெடுத்து வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
தேர்தல் நடக்கும் இந்த சூழலில், அது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத மத்திய அரசு, அமலாக்கத்துறை பாய்ச்சலையும் வேகமெடுக்க வைத்திருக்கிறது. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும், தேர்தல் நன்னடத்தை விதிகள் கட்டுப்படுத்தாது என்றாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, விசாரணை அமைப்புகளின் பாய்ச்சலை மத்திய அரசு பொதுவாக கட்டுப்படுத்தி வைக்கும்.
கைது: ஆனால், சிட்டிங் மத்திய பாஜக அரசின் உத்தரவின் பேரில் அமலாக்கத்துறை நேற்று தமிழகத்தில் அதிரடி ரெய்டுகள் நடத்தியது, டெல்லியில் கெஜ்ரிவாலை கைது செய்தது உள்ளிட்ட விவகாரங்களை அமலாக்கத்துறையினரே ரசிக்கவில்லை என்கிறார்கள் அத்துறை வட்டாரத்தினர். டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளனர். அதற்கான பின்னணி மற்றும் காரணத்தை நாம் பார்க்கலாம்.
மதுபானக் கொள்கை விவகாரத்தில் நேற்று மாலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்யும் என்று ஆம் ஆத்மி தலைவர் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோர் கூறியிருந்தனர். அதேபோல் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.
விவாதம்: எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக, தேர்தல் பணிகளில் அவர்களின் கவனத்தை முடக்குவதற்காக இத்தகைய ரெய்டுகள் நடத்தப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பாஜகவுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் என்கிற கருத்துக்களும் பாஜக வழக்கறிஞர்கள் மத்தியில் எதிரொலிக்கிறது. ஆனால், தமிழக பாஜகவோ, தமிழகத்தில் ரெய்டுகள் நடக்க வேண்டும் என தேசிய தலைமைக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
டேமேஜ் செய்யலாம்; காரணம், திமுகவின் இமேஜை இதன் மூலம்தான் டேமேஜ் செய்ய முடியும் என நினைக்கிறனர். அதாவது, ஆளும் கட்சியான திமுக, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அக்கட்சிக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் தொழில் நிறுவங்களில் கோடி கோடியாக பணத்தை பதுக்கி வைத்திருக்கிறது என மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான நெகட்டிவ் இமேஜை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தமிழகத்தில் ரெய்டுகள் அதிகரிக்க வேண்டும் என டெல்லிக்கு வேண்டுகோள் வைத்தபடி இருப்பதுதான் ரெய்டுக்கு காரணம் என்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications