சென்னையில் எஸ் டி கூரியர் நிறுவனங்களில் 2வது நாளாக நீடிக்கும் அமலாக்கத்துறை சோதனை.. தேடுவது என்ன?
சென்னை: எம்.பி நவாஸ் கனிக்கு சொந்தமான எஸ்.டி. கூரியர் நிறுவனங்களில் 2ஆம் நாளாக அமலாக்கத்துறை சோதனை நிலையில் தேனாம்பேட்டை, தி.நகரில் உள்ள எஸ்.டி கூரியர் அலுவலகங்களில் சோதனை நீடித்து வருகிறது. கூரியர் நிறுவனத்தின் மூலம் பொருட்கள் எதுவும் சட்டவிரோதமாக கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை தலைலையிடமாக கொண்டு துவங்க்பட்ட எஸ்.டி. கூரியர்ஸ் நிறுவனங்கள் இன்று 1946 கிளைகளையும் 340 இணைப்பு மையங்களோடு விரிவடைந்துள்ளது. இது ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ் கனிக்கு சொந்தமான நிறுவனமாகும். எஸ் டி கூரியர் நிறுவனத்தில் நவாஸ் கனியின் மூத்த சகோதரர் அன்சாரி தான் தலைமை இயக்குனராக உள்ளார். நவாஸ் கனியும் நிர்வாக இயக்குனராக உள்ளார். அவருடைய மற்றொரு சகோதரர் சிராஜுதீன் இணை இயக்குனராக உள்ளனர்.

ராமநாதபுரம் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே மீண்டும் போட்டி என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது. இந்த சூழலில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனிக்கு சொந்தமான எஸ்.டி. கூரியர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது கூட்டணி கட்சிகளிமையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்.டி கூரியர் நிறுவனத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளும், தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். 2020ஆம் ஆண்டுக்குள் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் கிளைகளை முழுவதுமாக விரிவுப்படுத்தியுள்ளது.
எஸ்.டி. கூரியர்ஸ் கல்வி அறக்கட்டளையின் மூலமாக வருடந்தோறும் தமிழகத்தில் படிக்க ஆர்வம் இருந்தும் பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் ஏழை மாணவர்களுக்கு 10, 12 ஆம் வகுப்புகள், கல்லூரியில் படிப்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதோடு அரசு படிப்பில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகையும், இவர்களின் அண்ணலார் கல்வி அறக்கட்டளை மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே பல்லாவரம் எஸ்.டி கூரியர் தலைமை அலுவலகத்தில் நேற்றுகாலை முதல் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேனாம்பேட்டை, தி. நகர் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நீடித்து வருகிறது. கூரியர் நிறுவனத்தின் மூலம் பொருட்கள் எதுவும் சட்டவிரோதமாக கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் வேட்பாளராக நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுவார் என தெரிவித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவருக்குசொந்தான கூரியர் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications