செந்தில் பாலாஜி சரண்டர்? உதயநிதி பினாமிகள் மாட்ட இதுதான் காரணம்.. அடித்து சொன்ன திருச்சி சூர்யா
டெல்லி: செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் கொடுத்த வாக்குமூலம் மூலமே உதயநிதியின் நண்பர்களை பிடித்து உள்ளனர். இதுவரை இந்த 3 பேரின் பெயரும் யாருக்கும் தெரியாது.. இப்போது தெரிய காரணமே செந்தில் பாலாஜிதான்.. அதனால்தான் செந்தில் பாலாஜியை விட்டுவிட்டு இப்போது நெருக்கமாக உதயநிதி பக்கம் சென்றுவிட்டனர். ரகசியமாக பல திமுக எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி பக்கம் உள்ளனர்., என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 22-ந்தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தது. இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
திருச்சி சூர்யா பேட்டி
அமலாக்கத்துறை ரெய்டு தொடர்பாக திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சமீபத்தில் டெல்லி போனார்.. அவர் அப்ரூவர் ஆகத்தான் போனார். டாஸ்மாக் ரெய்டு நடந்த பின்பே அவர் டெல்லிக்கு சென்றார். வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லவே அவர் டெல்லி போனார். தைரியமாக இருங்கள் என்று செந்தில் பாலாஜியிடம் ஸ்டாலின் சொன்னார். ஆனால் அதை செந்தில் பாலாஜி கேட்கவில்லை. டெல்லியிடம் ஒரு முக்கியமான ஆள் வழியாக செந்தில் பாலாஜி பேசுகிறார்.
அதானி வழியாகவே செந்தில் பாலாஜி டெல்லியிடம் பேசுகிறார். அதானிதான் செந்தில் பாலாஜியின் லாபி. அதனால் அவருக்கு இனி சிக்கல் இல்லை. அதானி வழியாக போனால் ஸ்டாலினால் கண்டுபிடிக்க முடியாது. செந்தில் பாலாஜி காரணமாகவே ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ், விக்ரம் ஜூஜூ ஆகிய உதயநிதி ஸ்டாலினின் கருப்பு பண முதலைகள் சிக்கலில் மாட்டி உள்ளனர்.
செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் கொடுத்த வாக்குமூலம் மூலம் இந்த ரூட்டை பிடித்து உள்ளனர். இதுவரை இந்த 3 பேரின் பெயரும் யாருக்கும் தெரியாது.. இப்போது தெரிய காரணமே செந்தில் பாலாஜிதான்.. அதனால்தான் செந்தில் பாலாஜியை இப்போது நெருக்கமாக உதயநிதி பக்கம் சென்றுவிட்டனர். ரகசியமாக பல திமுக எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி பக்கம் உள்ளனர்.
டெல்லி என்ன சொல்கிறதோ அதை செந்தில் பாலாஜி செய்வார். அவர் மீண்டும் சிறைக்கு செல்ல விரும்பவில்லை. செந்தில் பாலாஜி திமுகவின் 15 அமைச்சர்களுடன் தாய் கழகத்திற்கு கூட செல்வார். அதாவது அதிமுகவிற்கு கூட செல்ல தயார். இத்தனை காலமாக அமைச்சர்களை ரெய்டு செய்த அமலாக்கத்துறை ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ், விக்ரம் ஜூஜூ ஆகியோர்களை ரெய்டு விடுகிறது. இதற்கு என்ன காரணம்? செந்தில் பாலாஜி தந்த தகவல் மூலமே இப்படி ரெய்டு நடத்துகிறார்கள், என்று திருச்சி சூர்யா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
