100 கேள்விகள்.. பொன்முடியிடம் அமலாக்கத்துறை கேட்டது என்னென்ன? 6 மணிநேர விசாரணையின் பரபர பின்னணி
சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தனது மகனும் எம்பியுமான கவுதம சிகாமணியுடன் 2வது நாளாக நேற்று அமலாக்கத்துறையிடம் ஆஜரானார். இருவரிடமும் அமலாக்கத்துறையினர் 6 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தான் அமைச்சர் பொன்முடியிடம் 6 மணிநேரம் நடந்த விசாரைண பற்றியும் அவரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் குறித்தும் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவரது மகன் கவுதம சிகாமணி. இவர் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் திமுக எம்பியாவார்.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோரின் வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
2006-2011 வரை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி தனது மகன், உறவினர்கள் உள்பட 5 பினாமிகள் பெயரில் செம்மண் குவாரி உரிமத்தை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இதன்மூலம் கிடைத்த வருவாயை பினாமி பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தோனேசிய நிறுவனத்தில் முதலீடு செய்து ரூ.41.57 லட்சம் மதிப்பிலான பங்குகள் வாங்கி அதனை ரூ.100 கோடிக்கு விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தான் அமலாக்கத்துறையினர் சோதனையை மேற்கொண்டனர்.
அதன்படி நேற்று முன்தினம் மட்டும் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, விழுப்புரத்தில் உள்ள அவரது மகன் கௌதம் சிகாமணியின் வீடு உள்ளிட்ட ஏழு இடங்களில் திங்கட்கிழமை காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் 13 மணிநேரம் சோதனை நடந்தது.
சோதனைக்கு பிறகு அவரை அமலாக்கத்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவரது மகன் கவுதம சிகாமணியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவர்கள் 2 பேரிடமும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக 7 மணிநேரம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு நேற்று அதிகாலை 3 மணிக்கு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று அமலாக்கத்துறை சார்பில் பொன்முடி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து முக்கிய விஷயங்களை தெரிவித்தது. அதில் ‛‛இந்தச் சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள், ரூ. 81.7 லட்சம் பணம், சுமார் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள் வெளிநாட்டு பணம் (பிரிட்டிஷ் பவுண்டுகள்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.41.9 கோடி நிலையான வைப்பு நிதியும் முடக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது ஒருபுறம் இருக்க அமலாக்கத்துறை உத்தரவின்பேரில் நேற்று மாலை 4 மணிக்கு மீண்டும் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோர் சென்னை சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். நேற்றைய விசாரணை சுமார் 6 மணிநேரம் நடந்தது.
இந்த 6 மணிநேரத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் தனித்தனியே விசாரித்தனர். குறிப்பாக அமைச்சர் பொன்முடியிடம் மொத்தம் 100 கேள்விகள் வரை கேட்கப்பட்டது. இந்த கேள்விகள் ஆம், இல்லை என்ற வகையில் கேட்கப்பட்டது. அமைச்சர் பொன்முடியும் இந்த கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த கேள்விகள் அனைத்தும் குவாரி உரிமை முறைகேடு, வெளிநாட்டு முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையல் இருந்தததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விசாரணையை தொடர்ந்து பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோர் வீடு திரும்பினர். இவர்கள் 2 பேரும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எந்த வகையான சம்மனும் இதுவரை வழங்கப்படவில்லை. ஒருவேளை அமலாக்கத்துறை மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் இருவரும் அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications