SIR: ஒரு வாக்காளர் கூட விடுபடக்கூடாது.. கவனமாக இருங்க! திமுக மா.செ கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்
சென்னை: ஒரு வாக்காளர் கூட விடுபட்டு விட கூடாது, எஸ்ஐஆர் வாக்காளர் வரைவு பட்டியல் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் திமுகவிற்கு வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் நமது வாக்காளர்கள் இருக்கிறார்களா என பார்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் தேர்தல் பணிகளை திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியே தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் எனும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணியை மேற்கொண்டது. இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டன.
இடம்பெயர்தல், இறந்தவர்கள் என மொத்தமாக 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது. இந்த நிலையில் தான் திமுக மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் வரைவு வாக்காளர் பட்டியலில் விரைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் காணொளி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். இது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் வரும் ஜனவரி 18 ஆம் தேதி வரை அதற்கான விண்ணப்பங்களை நிரப்பி சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதற்குள் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்களை இணைக்க அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
திமுக மகளிரணி மாநாட்டை
ஒரு வாக்காளர் கூட விடுபட்டு விட கூடாது, எஸ்ஐஆர் வாக்காளர் வரைவு பட்டியல் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் நமது வாக்காளர்கள் இருக்கிறார்களா என பார்க்க வேண்டும்.
வரைவு வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் நிர்வாகிகள் விரைந்து செயல்பட வேண்டும். புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் திமுகவுக்கு வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். 29 ஆம் தேதி நடைபெற உள்ள திமுக மகளிரணி மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications