ஓபிஎஸ்க்கு ஓகே சொன்ன எடப்பாடி? அமித்ஷாவை பார்த்த அடுத்த நாளே ஆக்சன்! ஆனால், ஒரே ஒரு கண்டிஷன்!
சென்னை: கடந்த சில வாரங்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உட்கட்சியிலேயே நெருக்கடி உருவாகி வருகிறது. கட்சியின் சீனியர்கள் தனியாக பிரிந்து செல்வதும், திமுகவில் இணைவதும் பலத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உச்சகட்டமாக கட்சியின் மிக மூத்த சீனியரான செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்று இருக்கிறார். ஓபிஎஸ் விஜய் பக்கம் செல்லலாம் என கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அது என்ன? அதிமுகவில் என்ன நடக்கிறது? என்பது குறித்து பார்க்கலாம்..
தமிழக அரசியல் களத்தில் கடந்த சில வாரங்களாக அதிமுகவில் நடந்து வரும் நிகழ்வுகள் அக்கட்சி தலைமைக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அதிமுகவின் பலவீனத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
அனுபவம் நிறைந்த ஒரு சீனியர் தலைவர் எதிர்க்கட்சியை விட்டு விஜய் தலைமையிலான தவெகவில் சேர்ந்திருப்பது, அதிமுகவில் இருந்து மேலும் பல நிர்வாகிகள் வெளியேறக்கூடும் என்ற அச்சத்தை கிளப்பிவிட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்
இதனால், "இப்படியே போனால் கட்சிக்கே ஆபத்து" என உணர்ந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தனது அரசியல் யுக்திகளில் சில திருத்தங்களை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொள்ளவும், ஏற்கனவே ஏற்பட்ட பிளவுகளை சரிசெய்யவும், புதிய யுக்தி அவசியம் என்பதே ஈபிஎஸ் தரப்பின் புரிதலாகிவிட்டது. இந்த நிலையில், பல ஆண்டுகளாக அதிமுகவிலிருந்து பிரிந்து செயல்பட்டு வரும் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சி தீவிரமடைந்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி
இதுவே அதிமுகவை மீண்டும் பலம் செய்வதற்கான வழி என்பதே கட்சிக்குள் நிலவும் முக்கிய கருத்து. ஆனால், இந்த மூவரையும் மீண்டும் நேரடியாக அதிமுகவில் சேர்க்க எடப்பாடி தயாராக இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது கட்சியில் நிர்வாகப் பொறுப்போ, உறுப்பினர் பதவியோ வழங்காமல், அவர்கள் தனிப்பட்ட அணிகளாக இருந்தாலும் பரவாயில்லை, கட்சி ஆரம்பித்தாலும் பரவாயில்லை. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியாக இணைந்துகொள்ளலாம் என்ற புதிய யூகத்தை ஈபிஎஸ் முன்வைத்துள்ளார்.
தவெக
இது மூலம், அதிமுக தலைமையின் கட்டுப்பாட்டை எவ்விதத்திலும் பாதிக்காமல், சிதறி கிடக்கும் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் என்ற கணக்கில் இபிஎஸ் செயல்படுகிறார். இதற்கிடையில், தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தனது 52 ஆண்டு அரசியல் அனுபவம் குறித்து பேசியிருந்தார். அதற்கு மறைமுக பதிலடியாக, "உனக்கு 52 வருஷம் என்றால் எனக்கு 51 வருஷம் அனுபவம்" என எடப்பாடி பதிலடி கொடுத்திருந்தார்.
சசிகலா-ஓபிஎஸ் அணி
இதன் மூலம், "அனுபவத்தில் நானும் குறையாதவர்" என்ற செய்தியை எடப்பாடி அனைவருக்கும் வலியுறுத்த முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அதிமுகவினர் தவெகவுக்கு செல்வதை தடுக்க தற்போது அதிமுக தலைமை தீவிரமாக செயல்படுகிறது. குறிப்பாக, சில மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் சசிகலா-ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் தவெகவிற்கு நகர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை தடுக்க எடப்பாடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
அதிமுக
அதிமுகவின் தற்போதைய அரசியல் விளையாட்டின் மையம் ஒன்று தான் "கட்சியின் கட்டுப்பாட்டை இழக்காமல், வாக்குகளை மீண்டும் ஒருங்கிணை சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் இணைத்துக்கொள்வது என்ற இபிஎஸின் சமரச யோசனையை பாஜகவும் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல், அதிமுகவில் இருந்து வெளியேற நினைக்கும் நிர்வாகிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications