என்னது டிடிவியா? அதைப் போய் நயினார் கிட்ட கேளுங்க! செய்தியாளர் கேள்வியால் டென்ஷனான எடப்பாடி!
திருப்பத்தூர்: டிடிவி தினகரனுடன் ஒரே மேடையில் தோன்றுவது குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சொன்னால், அவரிடம் தான் கேட்க வேண்ட்மெனவும், பாஜக கூட்டணியில் தான் இருக்கிறது, அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருப்பத்தூரில் அனைத்து சங்க நிர்வாகிகள் தொழில் முனைவோர்கள் கலந்துரையாடல் கூட்டமானது அதிமுக பொதுசெயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனி சாமி தலைமையில் நடைபெற்றது. உடன் முன்னாள் அமைச்சர் வீரமணி, எம்பி தம்பிதுரை உள்ளிட்டோர், வணிகர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி," திருப்பத்தூர் மாவட்டத்தில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகின்றேன். இன்று காலை சுமார் 32 அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய பிரச்சனை குறித்து என்னுடைய கவணத்திற்கு கொண்டு வந்தார்கள். அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த பின்னர் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும்.
அதிமுக
மேலும் உட்கட்சி விவகாரத்தை பகிரங்கமாக மேடையில் கேட்க கூடாது. கட்சி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதிமுக ஆட்சியில் ஏரிகளை தூர்வாரினோம். மதகுகளையும் பலப்படுத்தினோம். விவசாயிகளுக்கு தேவையான நீர்களை வழங்கினோம். மேலும் எதாவது செய்ய வேண்டுமானால் மனுவாக கொடுங்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செய்வோம்.
திமுகவின் சாதனை
தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளை மூடியது தான் திமுகவின் சாதனை. பள்ளிகளை மூடுவதற்கு முன்பாக அதை தொடர்ந்து நடத்துவதற்கான நடவடிக்கை எடுத்திருந்தால் பாராட்டு வேண்டிய விஷயம். ஏற்கனவே இயங்கி வந்த அரசு பள்ளி மூடுவது சரியில்லை. தமிழகத்தில் கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் அதிமுக ஆட்சியில் நிறைய அரசு பள்ளிகளை ஏற்படுத்தினோம். அப்பொழுதுதான் அறிவுபூர்வமான மாணவர்களை உருவாக்க முடியும்
சட்டம் ஒழுங்கு
இந்த ஆட்சியில் சரியான கவனம் செலுத்தாத காரணத்தினால் சுமார் 207 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இது வருத்தமும் வேதனையும், அளிக்கிறது. இதற்கு அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்த பிறகு சட்டம் ஒழுங்கும் அடியோடு சீர்கெட்டு விட்டது. இதை எல்லா பொது கூட்டங்களிலும் பேசி வருகிறேன். தங்க வெள்ளி நிலவரம் வருவதை போல் பத்திரிகைகளில் கொலை நிலவரம் வருகிறது. காவல்துறை மீது அச்சமில்லாததால் ரவுடி ராஜ்யம் நடக்கிறது.
மு.க.ஸ்டாலின்
போதையால் கொலை கொள்ளை திருட்டு பாலியல் குற்றங்களும் நடக்கிறது. தாயுமானவன் திட்டம் குறித்து நல்லதா கெட்டதா என எதிர்காலத்தில் தான் சொல்ல முடியும். முதல்வர் எல்லா திட்டங்களையும் துவங்குகிறார். ஆனால் அதனை நடைமுறைப்படுத்தி வெற்றி பெற செய்ய வேண்டும். அப்போது தான் மக்கள் ஏற்றுகொள்வார்கள். 50 திட்டங்கள் கிடப்பில் இருக்கிறது. திட்டத்தின் நோக்கம் வெற்றி பெற வேண்டும் .
நயினார் நாகேந்திரன்
டிடிவி தினகரனுடன் ஒரே மேடையில் தோன்றுவது குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சொன்னார். அவரிடமே கேளுங்கள். பாஜக கூட்டணியில் இருக்கிறது. அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. இது ஜனநாயக நாடு. யார் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம். எல்லாமே கட்சி மாறிமாறி இருக்கிறார். அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். திமுகவில் சேர்ந்தார். அதே போல் மைத்ரேயனும் திமுகவில் சேர்ந்தார். இன்னும் தேர்தலுக்கு எட்டுமாதங்கள் இருக்கிறது. இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும்" என கூறினார்.
-
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications