“துண்டை” போட்ட எடப்பாடி.. கோட்டைவிட்ட” பன்னீர்! டார்கெட் இரட்டை இலை
சென்னை: தர்மயுத்த காலத்தில் ஓபிஎஸ் அணியில் இருந்த அதிமுக முன்னாள் அவைத் தலைவர் மதுசூதனன் மறைந்து ஓராண்டாகும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு நினைவு நாளன்று அன்னதானம் வழங்குவதாக அறிவித்து இருப்பது அதிமுக பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்துக்கு வைக்கப்படும் குறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய சமயத்தில் அப்போதைய அவைத் தலைவர் கே.பி.முனுசாமி, மாஃபா.பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட பலர் அவருடன் இருந்தனர்.
அதன்பின்னர், கட்சி உங்களுக்கு ஆட்சி எங்களுக்கு என்ற உடன்படிக்கையின்படி ஓ.பன்னீர்செல்வம் ஒரு வழியாக டெல்லியின் தலையீட்டால் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் ஒன்றுசேர்ந்தார். ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸும் இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸும் நியமிக்கப்பட்டனர்.

முதலமைச்சர் வேட்பாளர்
முதலமைச்சராக எடப்பாடியே தொடர துணை முதலமைச்சராக பன்னீர்செல்வம் பதவியேற்றார். இப்படியே ஆட்சியை நிறைவு செய்துவிட 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற போட்டி எழுந்தது. இந்த முறை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பேசினர். அதிலும் விட்டுக்கொடுத்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளாராக ஏற்று தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர்
2021 தேர்தலும் நடந்து முடிந்தது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றது. ஆனால், அதிமுகவில் தோல்வியை பொருட்படுத்தாமல் அதிகாரப் போட்டிக்கு ஆயத்தமாகினார் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர். இம்முறை எதிர்க்கட்சித் தலைவர் யார் என இருவருக்கும் போட்டி தலைதூக்கியது. இதிலும் எடப்பாடி கை ஓங்க வழக்கம்போல் ஓ.பன்னீர்செல்வம் விட்டுக் கொடுத்து ஒருங்கிணைப்பாளராகவே தொடர்ந்தார்.

ஒற்றைத் தலைமை
இப்படியே சில முரண்பாடுகளுடன் கட்சி பயணித்துக் கொண்டிருக்க கடந்த ஜூன் மாதம் ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்தது. இதன் காரணமாக முதல் பொதுக்குழு கூட்டம் கூடி பின்னர் அது கைவிடப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகள், போராட்டக்கங்களை கடந்து கடந்த 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடியது. அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்று நிறைவேற்றப்பட்டு இருந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

எடப்பாடி தலைமையில் அதிமுக
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பாத்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பல்வேறு கட்சி, சின்னம், வங்கிக் கணக்குகள், தலைமை அலுவலகம் தொடர்பாக சட்டப்போராட்டங்களை இரு தரப்பினரும் நடத்தி வருகின்றனர்.

மதுசூதனன் நினைவு நாள்
இந்த நிலையில் மறைந்த அதிமுக அவைத் தலைவர், மதுசூதனனின் முதலான் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 5 ஆம் தேதி அன்னதான நிகழ்ச்சி நடத்துவதாக அதிமுக தலைமை அறிவித்து இருக்கிறது. "அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது." என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மதுசூதனனுக்கு புகழாரம்
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் விசுவாசமிக்க தொண்டரும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நம்பிக்கைக்குரிய போர்ப்படைத் தளபதியும், கழகத் தொண்டர்களை எப்பொழுதும் தன் தோள்களில் வைத்துக் கொண்டாடிய மூத்த முன்னோடியும், கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவராகப் பணியாற்றியவர் மதுசூதனன்." என்று புகழாரம் சூட்டப்பட்டு உள்ளது.

இரட்டை இலை
ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை நடத்தியபோது அவரது அணியில் இருந்தவர் மதுசூதனன். கடந்த 2017 ஆம் ஆண்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு பின்னர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இணைந்த பின்னர் இரட்டை இலை சின்னம் மீதான தடையை தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்று மதுசூதனனுக்கே கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த உரிமை இருப்பதாக கூறியது. இதை அப்போதே ஓபிஎஸ் தெரிவித்தார். இந்த சூழலில்தான் மதுசூதனனுக்கு நினைவு நாள் நடத்துகிறது இபிஎஸ் அணி.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications