EPS Vs OPS: அதிமுக ஒருங்கிணைப்பு.. எண்ட் கார்டு போட்ட எடப்பாடி.. ஓபிஎஸ்க்கு இடமே கிடையாது என அறிவிப்பு
சென்னை: ஓ பன்னீர் செல்வத்தை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். ஓபிஎஸ் அதிமுக அடிப்படை உறுப்பினரில் இருந்தே நீக்கப்பட்டு விட்டார். அதிமுக பொதுக்குழுவில் தான் அவரை நீக்கி முடிவு எடுக்கப்பட்டது. பொதுச்செயலாளர் முடிவு எடுக்கவில்லை. பொதுக்குழு தான் முடிவு எடுத்தது. எனவே மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி கூறியுள்ளார்.
காலையில், 'ஒன்றிணைப்புக்கு நான் ரெடி.. எடப்பாடி பழனிசாமி அண்ணன் ரெடியா".. என்று ஓ பன்னீர் செல்வம் கூறிய நிலையில் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறியுள்ளார்.

நான் ரெடி.. அண்ணன் ரெடியா?
அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக டிடிவி தினகரன் இணைந்தார். எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடியை பங்காளி என்றும் டிடிவி தினகரன் கூறியது இதுதான்.டா அரசியல் என அனைவரையும் புருவம் உயர்த்த செய்திருந்தது. இதனால் அடுத்ததாக ஓ பன்னீர் செல்வமும் இணைவார் என பேசப்பட்டது.
அதற்கு ஏற்றார் போல இதுவரை முடிவை அறிவிக்காமல் இருக்கும் ஓ பன்னீர் செல்வம் தேனியில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு அதிமுகவில் இணைய தயராக இருப்பதாக முன்னள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறியிருந்தார். ஒன்றிணைய நான் ரெடி.. அண்ணன் எடப்பாடி ரெடியா? என்றும் ஓபிஎஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை
ஆனால் இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இன்று சேலம் ஓமலூரில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைவு விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
பொதுக்குழுவால் நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை. பொதுக்குழு எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி விஷயத்தில் திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம். மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையும். ஓ பன்னீர் செல்வம் அடிப்படை உறுப்பினரில் இருந்தே நீக்கப்பட்டு விட்டார்.
ஓபிஎஸ்சின் அடுத்த பிளான் என்ன?
அப்படி இருக்கையில் மீண்டும் இணைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. இது அதிமுக பொதுச்செயலாளர் முடிவு கிடையாது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடியும். அதிமுக தொண்டர்கள் எல்லாரும் ஒன்று கூடி எடுத்த முடிவு.. எனவே இணைவு என்ற பேச்சிறே இடமில்லை" என்றார்.
ஒன்றிணைப்புக்கு நான் ரெடி.. எடப்பாடி பழனிசாமி ரெடியா என்றும், எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்று ஓ பன்னீர் செல்வம் குறிப்பிட்டிருந்த நிலையில், இணைவு என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் ஓ பன்னீர் செல்வம் அடுத்தக் கட்டமாக என்ன முடிவு எடுப்பார் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக மாற்று கட்சியில் இணைந்த நிலையில் தற்போது தனித்தே விடப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் பன்னீர்செல்வத்தை எடப்பாடி சேர்க்க மாட்டார் என்பது தெரிந்த விஷயம் தான் எனவும், பன்னீர்செல்வம் வேறு எங்கும் போக மாட்டார்.. பாஜக கூட்டணிக்கு உள்ளேயே இருப்பார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications