ஈரோடு கிழக்கு தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக? ஆழ்ந்த யோசனையில் எடப்பாடி..11ல் வெளியாகும் அறிவிப்பு!
சென்னை: ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து அங்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் புறக்கணிக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர் அதிமுகவினர். வரும் 11ஆம் தேதி சென்னையில் நடக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர்14ஆம் தேதி உயிரிழந்தார்.
ஈரோடு கிழக்கு தேர்தல்:
அவரின் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. இதற்கிடையே பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அந்த தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
யார் போட்டி?:
இந்த நிலையில் ஆளும் திமுக கூட்டணி தேர்தலில் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் திமுகவே போட்டியிடுமா? அல்லது கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதற்கு இடையே நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாக இருக்கிறது. அதே நேரத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த தமிழக வெற்றி கழகம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறது.
அதிமுக போட்டியிடுமா?:
இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கடந்த முறை அறிவிக்கப்பட்ட போது அக்கட்சி சார்பில் தென்னரசு போட்டியிட்டு சுமார் 40,000 வாக்குகள் பெற்றார். அதற்கு பிறகு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது. இந்த நிலையில் அதே பாணியில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் புறக்கணிக்குமா? அல்லது ஆளும் தரப்புக்கு இருக்கும் எதிர்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தேர்தலில் போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் 11ஆம் தேதி பிற்பகலில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசகர் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தேர்தலை புறக்கணிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications