ஈரோடு கிழக்கு..ஓபிஎஸ் இல்லாமல் அதிமுக இல்லை..மக்கள் செல்வாக்கை இழக்கும் இபிஎஸ்..சொல்வது தனியரசு
ஓ.பன்னீர் செல்வத்தை நிராகரித்து விட்டு எடப்பாடியால் அதிமுகவை வலிமை பெற செய்ய முடியாது என கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வத்தை நிராகரிக்கும் எடப்பாடி பழனிச்சாமி பின்னடைவை சந்திப்பார் என்று கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு. அதிமுகவை வலிமைப்படுத்த பாடுபடும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தருவதாகவும் தனியரசு தெரிவித்துள்ளார். அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளைக் கூட எடப்பாடி பழனிச்சாமியால் பெற முடியாது என்றும் கூறினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாகக் களமிறங்குகின்றனர். இதனால் இரட்டை இலை முடங்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. பாஜக, இருவரில் யாரை ஆதரிக்கும் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது.
அதிமுகவோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 2 முறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றவர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பிளவு பட்ட போது ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிர் அணியாக இருந்த சசிகலாவிற்கு ஆதரவாக நின்றார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினை எழுந்த போது கொங்கு மண்டலத்தில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு கொடுத்தவர் தனியரசு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளரை அறிவிக்க உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் தனியாக வேட்பாளரை களமிறக்க உள்ளார். இன்றைய தினம் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது வீட்டில் தனியரசு நேரில் சந்தித்து பேசினார் தனியரசு. முகம் முழுக்க புன்னகையுடன் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார் ஓ.பன்னீர் செல்வம். பதிலுக்கு அவரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார்.

ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்தும், வழக்குகள் குறித்தும் ஓ.பன்னீர் செல்வத்திடம் பேசினேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் திராவிட முன்னேற்றக்கழக கூட்டணி வலிமையாக உள்ளது. ஒன்று பட்டிருந்த அதிமுக தற்போது பிளவு பட்டிருக்கிறது. கட்சிக்குள் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் எடப்பாடிக்கும் ஒற்றுமையில்லை. எடப்பாடி பழனிச்சாமி திருந்தாமல் வேட்பாளரை அறிவிக்கப்போகிறார். எடப்பாடி பழனிச்சாமி பெரிய பின்னடைவை சந்திக்கப்போகிறார்.
ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக வலிமையடைய வேண்டும் என்பதை உணர்ந்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆதரவு அளித்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு எதிராக கட்சியை ஒருங்கிணைக்க பாடுபடும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தேன். ஓ.பன்னீர் செல்வத்தை நிராகரித்து விட்டு எடப்பாடியால் அதிமுகவை வலிமை பெற செய்ய முடியாது என்றும் தனியரசு தெரிவித்தார்.
அதிமுக தொண்டர்கள், தமிழக வாக்காள பெருமக்கள் எடப்பாடி பழனிச்சாமியின் எதேச்சதிகார போக்கினை நிராகரிப்பார்கள். ஓ.பன்னீர் செல்வத்தை நிராகரித்து விட்டு களத்திற்கு போகும் எடப்பாடி பழனிச்சாமி தோல்வியை சந்திப்பார். அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளே சிதற வாய்ப்பு உள்ளது எடப்பாடி அணிக்கு கிடைக்காது என்றும் தனியரசு தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications