சாதி அடையாளத்தை விடுங்க பாஸ்! அதைவிட ஆபத்தானது அரசியல் அடையாளம்! கொங்கு ஈஸ்வரன் ஆதங்கம்!
சென்னை: கிராமங்களில் சாதி அடையாளங்களை மறைக்க முன்வருபவர்கள் அரசியல் அடையாளங்களையும் மறைக்க முன் வர வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிகழ்காலங்களில் மக்கள் சாதி ரீதியாக பிரிந்து இருப்பதை விட அரசியல் ரீதியாக பிரிந்து இருப்பது தான் அதிகம் எனக் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் சாதியை காட்டிலும் நான் இந்தக் கட்சி, நான் அந்தக் கட்சி என மக்கள் மத்தியில் பிரிவுகள் இருப்பதாக வேதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈஸ்வரன் கூறியிருப்பதாவது;

சாதி அடையாளம்: ''தூத்துக்குடி மாவட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட இடங்களில் 64 ஊராட்சிகளில் சாதி அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டுகள் தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. நிகழ்காலங்களிலே மக்கள் சாதி ரீதியாக பிரிந்து இருப்பதை விட அரசியல் ரீதியாக அழுத்தமாக பிரிந்து இருப்பதை உணர முடிகிறது.''
அரசியல் கட்சிகள்: ''சாதிகளுக்கு இடையேயான வன்முறையை விட அரசியல் கட்சிகளுக்கு இடையேயான வன்முறைகள் அதிகம் காணப்படுகின்றன. தங்கள் அரசியல் எதிரிகளை குறிவைத்து தாக்குதலில் ஈடுபடுகின்ற நிகழ்வுகள் அதிகம் தென்படுகின்றன. இரண்டு கட்சிகளுக்கு இடையே நீண்ட பகையாக இது மாறி போகிறது. ஒரே சாதியை சேர்ந்தவர்கள் இரண்டு அரசியல் கட்சிகளாக பிரிந்து பகைமை பாராட்டுகின்ற நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.''
சட்ட ஒழுங்கு: ''சில நேரங்களில் ஒரே கட்சி உள்ளேயே பதவி சண்டைக்காக நடக்கின்ற நிகழ்வுகளும் உண்டு. இரண்டு கட்சிகளுக்கு இடையே சுவர் எழுதுவதிலே தொடங்கி கட்சி கொடிகள் நடுகின்ற வரை சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய காலகட்டத்தில் சாதிகளில் ஒருவருக்கொருவர் இணக்கமான உறவோடு இருப்பதையும் அரசியல் கட்சி மாறுபாடுகளால் ஏற்படுகின்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் அதிகமாகவும் இருக்கின்றன.''
அரசியல் அடையாளம்: ''இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒவ்வொரு கிராமத்திலும் அரசியல் அடையாளங்கள் தான் சாதி அடையாளங்களை விட அதிகமான மாறுபட்ட கருத்துக்கள் உருவாவதற்கு காரணமாக இருக்கின்றன. வெளிக்காட்டி கொள்கின்ற சாதி அடையாளங்களை மறைக்க முன்வருபவர்கள் அரசியல் அடையாளங்களை மறைத்துக் கொள்ள முன் வந்தால் இந்த காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.''
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications