சார்ஜிங் ஸ்டேஷன் பற்றி இனி கவலை வேண்டாம்! சென்னையில் 9 இடங்கள் தேர்வு.. 2 வாரத்தில் தொடங்கும் பணிகள்
சென்னை: சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க முதல்கட்டமாக 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் இணைந்து தேர்வு செய்துள்ள நிலையில், 2 வாரங்களில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு ஆகியவற்றுக்கு அதிக தொகை செலவு செய்வதற்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது பொதுமக்களுக்கு கூடுதல் எளிமையாக அமைந்துள்ளது.

மின்சார வாகனங்களின் பயன்
ஏனென்றால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஒருநாள் சார்ஜிங் செய்வதற்கு வெறும் 2 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகிறது. இதற்கான கட்டணம் ரூ.10க்கும் குறைவாக உள்ளது. ஆனால் பெட்ரோல் மூலமாக இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு ஒருநாளில் மட்டும் குறைந்தது ரூ.100 வரை செலவு செய்ய வேண்டிய தேவை உள்ளது.
சார்ஜிங் ஸ்டேஷன்
இதனால் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அந்த வாகனங்கள் சார்ஜின்றி நின்று போனால், அதனை தள்ளிக் கொண்டு வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அது ஒன்றும் மட்டுமே பின்னடைவாக இருந்து வரும் சூழலில், பொதுமக்கள் தரப்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க கோரிக்கைகள் எழுந்தன.
அதிகரிக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்
ஏனென்றால் சென்னையின் சில பகுதிகளில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டிருப்பது மின்சார வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய பலனை கொடுத்துள்ளது. அதேபோல் மதுரையில் டெம்பிள் சிட்டி ஹோட்டல்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் போட்டுக் கொள்ளும் வகையில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டிருப்பது நெடுஞ்சாலையில் வரும் கார்களுக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளது.
9 இடங்கள் தேர்வு
இதனிடையே சென்னை மாநகராட்சி கூட்டத்தில் 2 வாரங்களுக்கு முன்பாக திமுக கவுன்சிலர் செம்மொழி தரப்பில் மாநகராட்சி பகுதிகளில் அதிகளவு சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதற்கு 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு, விரைவில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த இடங்கள்?
அதன்படி பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங், பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங், அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங், தியாகராயர் நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங், தியாகராயர் நகர், சோமசுந்தரம் மைதானம், செம்மொழிப் பூங்கா, ஆயிரம் விளக்கு, மெரினா கடற்கரை பார்க்கிங், அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா, மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா ஆகிய 9 இடங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications