ஹைவோல்டேஜ்! சூப்பர் கம்ப்யூட்டரே குழம்பும் வானிலை! தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? வல்லுனர்கள் வார்னிங்
சென்னை: தமிழ்நாடு வானிலையில் இன்று எப்படி இருக்கும், வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே நகரும் என்பது குறித்து சென்னை ரெயின்ஸ் (chennairains.com) அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவடைந்தது. நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இது நகர் தொடங்கியது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இது நகர்ந்து வருகிறது.
இந்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு - புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதே சமயம் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

வானிலை அறிவிப்பு
தமிழ்நாடு வானிலையில் இன்று எப்படி இருக்கும், வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே நகரும் என்பது குறித்து சென்னை ரெயின்ஸ் (chennairains.com) அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில், வடக்கு தமிழ்நாடு கடலோர மாவட்டங்களை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. மிக மெதுவாக இது நகர்ந்து வருகிறது. தென்கிழக்கு சென்னையில் இருந்து 500 கிமீ தூரத்தில் இது இருக்கிறது. அதேபோல் காரைக்காலில் இருந்து 525 கிலோ மீட்டர் தூரத்தில் இது உள்ளது. காற்றின் வேகம் சாட்டிலைட் புகைப்படங்களில் தெளிவாக தெரிகிறது. தாழ்வு மண்டலத்தின் மையத்தில் இருந்து வடமேற்கு திசையில் இன்னும் மோதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வறண்ட காற்று உள்ளிட்ட எதிரான விஷயங்களுக்கு எதிராக அங்கே மோதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சென்னை ரெயின்ஸ்
ஒரு ஹை வோல்டேஜ் கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளும் முன்னும் பின்னும் வெற்றிபெறுவது போல ஆட்டம் மாறி மாறி சுவாரசியமாக சென்றால் அப்படி இருக்கும். அப்படித்தான் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமும் இருக்கிறது. உலகில் இருக்கும் பவர்புல் சூப்பர் கம்ப்யூட்டர்களையே குழப்பும் அளவிற்கு இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வெதர் மாடல்கள் மாறி மாறி வருகின்றன. அப்படி என்றால் வானிலை ஆய்வாளர்கள் எவ்வளவு குழப்புவார்கள். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு தமிழ்நாட்டு கடலோர மாவட்டங்கள் அருகே வந்தால், அதாவது சென்னையில் இருந்து 200 கிமீ தூரத்தில் இருக்கும் போது கனமழை பெய்யும்.

ஹை வோல்டேஜ்
அந்த நேரத்தில் மஹாபலிபுரம் டூ ஸ்ரீஹரிகோட்டா இடையே கனமழை பெய்யும் என்று வெதர்மாடல் எண்கள் சொல்கின்றன.பின்னர் இந்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்க நெருங்க வீக் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. எல்லா வெதர் மாடல்களும் இதைத்தான் சொல்கின்றன. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 200 கிமீ தொலைவில் நீண்ட நேரம் நகராமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு பின்புதான் வானிலை மாடல்கள் குழப்பமான ரிப்போர்ட்டுகளை கொடுக்கின்றன.

வானிலை
சில வானிலை மாடல்கள் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையில் செல்லும் என்று கூறுகின்றனர். சிலர் இந்த தாழ்வு மண்டலம் மேற்கு தென் மேற்கு திசையில் மத்திய/ தென் தமிழ்நாட்டை நோக்கி செல்லும் என்று கூறுகின்றன. இந்த குழப்பமான சூழ்நிலைகள் காரணமாக உறுதியாக ஒரு முடிவிற்கு வருவது குழப்பம். அதேபோல் உறுதியாக ஒரு வானிலை முடிவிற்கு வருவதும் சிரமம். இன்று மாலைக்கு பின் மற்றும் நாளை காலையும்தான் இதை கவனமாக பார்க்க வேண்டும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் பகுதியில் மழை பெய்கிறதா அல்லது கடலோரத்தில் சென்னையில் மழை பெய்கிறதா என்று பார்க்க வேண்டும். வெதர் மாடல்கள் சொல்வது போல கடலோர மாவட்டத்தில் மட்டும் மழை பெய்யுமா அல்லது மஹாபலிபுரம் - ஸ்ரீஹரிகோட்டா பெல்ட்டில் மழை பெய்யுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

சூப்பர் கம்ப்யூட்டர்
சென்னையை பொறுத்தவரை வானம் மேக கூட்டத்துடன் காணப்படலாம். அல்லது சாரல் மழை பெய்யலாம். அல்லது மிக கனமழை முதல் மிக மிக கனமழை பெய்யலாம். இது எல்லாம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எவ்வளவு நெருக்கமாக வடக்கு தமிழ்நாட்டை நோக்கி வருகிறது என்பதை பொறுத்து. இயற்க்கை என்ன மாதிரியான சீட்டு ஆட்டத்தை ஆடுகிறது என்பதை இப்போது சொல்ல முடியாது. போக போகத்தான் சொல்ல முடியும். சென்னையில் மழை எப்படி இருந்தாலும்.. கண்டிப்பாக காற்று அதிக அளவில் வீசும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்க நெருங்க காற்று வேகம் சென்னையில் 40-50 கிமீ அளவில் இருக்கலாம், என்று குறிப்பிட்டு உள்ளனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications