இனி நோ வெயிட்டிங்! புக் செய்த அனைவருக்கும் டிக்கெட்.. ரயில்வேயின் மெகா பிளான்? கசிந்த தகவல்
சென்னை: ரயில் பயணிகள் அனைவருக்கும் கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும் வகையில் மெகா பிளான் ஒன்றை முன்னெடுக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் போக்குவரத்து துறையில் முதுகெலும்பாக இருப்பது ரயில்வேதான். தொலை தூர பயணம் முதல் குறுகிய தொலைவு செல்ல வேண்டும் என்றால் கூட ரயில் வசதி இருந்தால் முதலில் ரயிலில் செல்வதற்கு தான் பயணிகள் விரும்புவார்கள். சவுகரியமான பயணம், மலிவான கட்டணம், திட்டமிட்ட நேரத்தில் இலக்கை பெரும்பாலும் சென்று விடலாம் ஆகிய வசதிகள் இருப்பதால் சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் என அனைத்து தரப்பினரும் விரும்பும் ஒன்றாக ரயில்கள் இருக்கின்றன.

இதனால், ரயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் பண்டிகை காலங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. பண்டிகை நாட்கள் சமயத்தில் ரயில்களில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய மறு நிமிடமே அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் காலியாகிவிடும். அதேபோல், தட்கல் முன்பதிவிலும் சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன.
அனைவருக்கும் கன்பார்ம் டிக்கெட்கள்: தீபாவளி பண்டிகைக்கு கூட நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கால் வைக்கக் கூட இடமில்லாத அளவுக்கு நெரிசல் அதிக அளவு இருந்தது. அதிலும் சூரத் ரயில் நிலையத்தில் பயணிகள் முண்டியடித்து ஏற முயன்ற போது ஸ்டேஷனில் பெரும் களபேரமே ஏற்பட்டது. ரயில்வே மீது கடுமையான விமர்சனங்களுக்கும் வழி வகுத்தது.
இந்த நிலையில், தான் வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் ரயில் பயணிகள் அனைவருக்கும் கன்பார்ம் டிக்கெட்டுகள் கிடைக்கும் வகையில் மெகா பிளானை முன்னெடுக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாம். இது தொடர்பாக பிரபல ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டிவி செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, மெகா ரயில்வே விரிவாக்க திட்டத்தின் படி ஒவ்வொரு நாளும் புதிய ரயில்கள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம்.
3 ஆயிரம் புதிய ரயில்கள்: ஒவ்வொரு ஆண்டும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கி.மீட்டர் தொலைவுக்கு ரயில்வே நெட்வொர் விரிவு படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். தற்போது நாள் ஒன்றுக்கு இந்திய ரயில்வேயில் 10,748 ரயில்கள் ஓடுகின்றன. ஒவ்வொரு நாளும் ஓடும் ரயில்களின் எண்ணிக்கையை 13 ஆயிரமாக அதிகரிக்கவும் ரயில்வே இலக்கு வைத்துள்ளது. அடுத்த 3 - 4 ஆண்டுகளுக்குள் 3 ஆயிரம் புதிய ரயில்களை இயக்கும் திட்டத்தை ரயில்வே வைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ரயில்வேயை ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 800 கோடி ஆகும். இதனை ஆயிரம் கோடியாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். அதேபோல் பயண நேரத்தை குறைக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. புதிய வழித்தடங்கள் அமைப்பது, ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம் பயண நேரத்தை குறைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புஷ் புல் ரயில்கள்: டெல்லி டூ கொல்கத்தா இடையேயான தொலைவை உடனடியாக பிக் அப் ஆகும் வகையில் வேகம் மற்றும் விரைவாக ரயிலின் வேகத்தை குறைப்பது ஆகியவற்றின் மூலம் பயண நேரத்தை 2 மணி நேரம் 20 நிமிடம் வரை குறைக்க முடியும் என்பது ரயில்வே மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புஷ் அண்ட் புல் தொழில் நுட்பம் மூலம் ரயிலின் வேகம் மற்றும் முடுக்கத்தை சாத்தியப்படுத்த முடியும்.
தற்போது, 225 ரயில்கள் ஆண்டுக்கு புஷ் புல் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்களில் இதன் அளவு 4 மடங்கு அதிகம் ஆகும். இந்த ரயில்கள் விரைவாக இலக்கை எட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம். வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் ரயில்வே இந்த மெகா பிளானை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் சாத்தியம் ஆனால், ரயில்களில் தற்போது டிக்கெட் கிடைக்க பயணிகள் படும் திண்டாட்டம் இருக்காது என நம்பலாம்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications