விஜய் மட்டுமல்ல நாங்களும் மக்களுக்கு உதவி பண்ணுவோம்! அரசியல் என்ட்ரி பற்றி சஞ்சீவ் ஓபன்! கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அவருடைய நெருங்கிய நண்பர்கள் யார் என்று கேட்டால் ரசிகர்கள் முதலில் சொல்லும் பெயர்களில் நடிகர் சஞ்சீப் பெயரும் இருக்கும். சினிமாவில் ஒன்றாக பயணித்த இந்த நட்பு இன்று அரசியலிலும் தொடர்கிறது. இந்த நிலையில் சஞ்சீவ் சமீபத்தில் பேசிய ஒரு பேட்டி சோசியல் மீடியாவில் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
சஞ்சீவ் சினிமாவில் ஹீரோவாக இல்லாவிட்டாலும் சீரியல்களில் ஹீரோவாகவும் குணசித்திர கேரக்டர்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். விஜய்யுடன் நிலவே வா, புதிய கீதை, பத்ரி, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். திரைக்கு வெளியேவும் இருவரும் பல வருடங்களாக நண்பர்களாக இருக்கிறார்கள். காலேஜ் பருவத்திலேயே இருவரும் ஒன்றாகத்தான் படித்திருக்கிறார்கள்.
விஜய் சஞ்சீவ் நட்பு
விஜய் பாதியில் காலேஜை விட்டு வெளியே வந்தாலும் எங்கள் நட்பு எப்போதுமே நெருக்கம் என்று பல இடங்களிலும் சஞ்சீவ் பேசி இருக்கிறார். அதுபோல அவர் பேசுகிற பேட்டியில் எல்லாம் விஜய் பற்றிய பேசுவதாலே பல விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நடிக்கும் போது கூட விஜய்யை இவர் காப்பி பண்ணுகிறாரே என்று கூட பலருமா கிண்டல் செய்து இருக்கிறார்கள். அதற்கும் அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நடிகர் சஞ்சீவ் பேட்டி
இந்த நிலையில் தான் சமீபத்தில் அவர் பேசிய பேட்டி இப்போ சோசியல் மீடியாவில் மீண்டும் இவரை ட்ரோலில் சிக்க வைத்திருக்கிறது. அதாவது அவர் பேசும்போது, எங்க குரூப்பில் விஜய்க்கு மட்டுமல்ல எங்க நண்பர்கள் எல்லோருக்குமே மக்களுக்கு உதவனும் என்று எண்ணம் இருக்கு. மத்தவங்க 10 ரூபாய் இருந்தா 2 ரூபாய் கொடுப்பாங்க. நான் 10 ரூபாய் இருந்தா 8 ரூபாய் கொடுத்துவிட்டு 2 ரூபாய் தான் வீட்டுக்கு கொண்டுட்டு போவேன்.
இப்போது விஜய் முதல்வர் ஆகிட்டாரு. அதனால அவர்கிட்ட போய் நண்பன்னு சொல்லிக்கிட்டு சீட்டு கேட்க முடியாது. முதலில் கட்சிக்காக வேலை செய்யணும். நான் இப்போ உழைத்துட்டு இருக்கிறேன் கண்டிப்பா பிறகு கேட்பேன் என்று சொல்லி இருக்கிறார். எந்த ஒரு வரி தான் இப்போது நெட்டிசன்களுக்கு புதிய டாபிக்காக மாறி இருக்கிறது.
கலாய்க்கும் நெட்டிசன்கள்
சீட்டு கேட்க மாட்டேன் என்று ஆரம்பிச்சு கடைசில கேட்பேன்னு சொல்லிட்டாரே? அடுத்த எம்எல்ஏ வேட்பாளர் ரெடியா? இது அடுத்த தேர்தலுக்கான ட்ரெய்லரா? என்று பலரும் கலாய்த்து வருகின்றனர். அதாவது விஜய்யின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத் தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட போது கட்சியில் நண்பருக்கு தான் முக்கியத்துவமா? என்ற விமர்சனம் எழுந்தது. ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி ஸ்ரீநாத் வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் தான் இப்போது சஞ்சய் பேசியதும் அடுத்த சீட்டு இவருக்கு தானா? என்ற கேள்வியையும் பலர் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

சிக்கிய வார்த்தை
ஏற்கனவே விஜய் ஜெயித்த திருச்சி கிழக்கு தொகுதியை ரிசைன் செய்திருப்பதால் அங்கு தேர்தல் வரும் போது அதில் சஞ்சீவ் போட்டியிடப் போகிறாரா? என்ற கேள்விகளும் எழுந்து வந்த நிலையில் இப்போது இவர் நான் பிறகு சீட்டு கேட்பேன் என்று சொல்லி இருப்பதால் இவரை பலரும் கலாய்த்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் ரசிகர்கள் கட்சிக்காக உழைத்த பிறகு வாய்ப்பு கேட்பேன் என்று தானே சொல்லி இருக்கிறார் விடுங்க.. இதுல என்ன தவறு இருக்கு என்று இவருக்கு ஆதரவான கமெண்டுகளையும் கொடுக்கிறார்கள்.
ஆனால் மீம்ஸ கிரியேட்டர்கள் இதை சும்மா விடாமல் சினிமாவில் விஜய் கூடவே இருந்து அவரையே காபி பண்ணினார். இப்போ அரசியலிலும் அவர் கூடவே வரப்போகிறாரா? என்று மீம்ஸ்களை தெறிக்க விடுகிறார்கள்.














Click it and Unblock the Notifications