விஜய் என் நண்பன் தான்.. ஆனால் அதுக்குன்னு இப்படியா சொல்லுவாங்க? பதிலடி கொடுத்த சஞ்சீவ்
சென்னை: நடிகராக இருந்த விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் சோசியல் மீடியாவிலும் அரசியல் வட்டாரத்திலும் பேசப்பட்டு வருகிறது. விஜய் முதலமைச்சர் ஆன பிறகு அவருடைய நண்பர்கள் பலருக்கும் உயர்ந்த பதவிகள் கொடுக்கிறார் என்ற சில விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் சஞ்சீவ் ஓபன் ஆக பேசியிருக்கிறார்.
விஜய் தேர்தலுக்கு முன்பே தன்னுடைய நண்பரான ஸ்ரீநாத்துக்கு தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருந்தார். இது முதலில் பேசப்பட்டது அதற்குப் பிறகு அவர் வெற்றி பெற்றதும் பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்திருந்தாலும் அதுவும் விமர்சனங்களை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது.

முதலமைச்சர் விஜய்யின் நண்பர்
அதேபோல விஜய் இரண்டு இடங்களில் ஜெயித்ததும் அதில் திருச்சி கிழக்கு பகுதியை ரிசைன் செய்திருந்தார். அந்த தொகுதியில் விஜயின் நண்பரான நடிகர் சஞ்சீவ்வை போட்டியிட வைப்பதாகவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால் இதுவரை அவற்றிற்கு எந்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை என்றாலும் இது குறித்து சஞ்சீவ்விடமே பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
நடிகர் சஞ்சீவ் பேட்டி
இந்த நிலையில் சஞ்சீவ் சமீபத்தில் பேசும்போது, விஜயை ஆரம்ப காலத்தில் எவ்வளவு கிண்டல் செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சில விஷயங்கள் அவரை வருத்தப்படுத்தி இருக்கிறது. அதனால் சில நேரங்களில் அவர் அழுது இருக்கிறார். ஆனால் அடுத்த நாள் காலையில் அந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னுடைய வேலையை கவனமாக இருப்பார். அவருடைய உழைப்புக்கு தான் இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது.
அதுபோல கூட சிலர் எந்த ஆதாரமும் இல்லாமல் பேசுகிறார்கள். ஒரு பத்திரிக்கையாளர் விஜய் முதலமைச்சர் ஆன பிறகு 500 கோடி அவருடைய நண்பர் சஞ்சீவ் வீட்டில்தான் வைத்திருக்கிறார் என்று சொன்னார். அதற்கு என்ன பதில் சொல்வது? இன்று அவர் முதலமைச்சராக இருந்தாலும் நான் அவரை பார்க்க போனால் வீட்டு வாசல் வர வந்து வழி அனுப்புவார். ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் இப்போதும் இருக்கிறார்.

மாறாத நண்பர்
நான் முதலமைச்சர் ஆகிட்டேன் அதனால நண்பர்கள் எல்லோரும் என்னிடம் மரியாதை காட்டணும்னு அவர் எதிர்பார்க்கிற ஆளே கிடையாது. என் மீது தவறாக ஆதாரமற்ற வகையில் பேசிய நபர் மீது நான் நஷ்ட ஈடு வழக்கு கொடுக்கலாம் என்று கூட பலரும் சொன்னார்கள். ஆனால் நான் அதற்கெல்லாம் டைம் வேஸ்ட் பண்ண விரும்பவில்லை. ஒரு வேலை இந்த பேச்சு அளவுக்கு மீறிப் போனால் அதை செய்யவும் நான் தயங்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதியில் சஞ்சீவ் போட்டியிட போகிறார் என்று சொன்னபோது கூட "எப்போ என்ன நடக்குமோ அது தானாக நடக்கும்" என்று சிரித்தபடியே சொல்லி இருந்தார். அதேபோல விஜய்யை காப்பியடிக்கிறார் என்று சஞ்சீவ் குறித்து பல விமர்சனங்கள் இருக்கிறது. அது குறித்து கூட அவர் பேசும்போது ஒரு காட்சியில் வேண்டுமென்றால் யாரையாவது போல நடிக்கலாம், ஆனால் வாழ்க்கை முழுக்க இன்னொருவரை காப்பி அடித்து வாழ முடியாது.
சஞ்சீவ் விளக்கம்
நான் இயல்பாக இருப்பது இதுதான். விஜய் என்னுடைய நண்பர். அதனால் நாங்கள் நெருங்கி பழகும் போது சில விஷயங்கள் ஒரே போல தெரியலாம். ஆனால் நான் அப்படியே அவரை காப்பி பண்ணுகிறேன் என்று சொல்வது எனக்கு சரி என்று தெரியவில்லை. இதற்கு முன்பு கூட விஜய் என்னிடம் கிண்டல் பண்ணி இருக்கிறார்.
டேய் நான் நடிச்ச படங்கள் வருஷத்துக்கு ஒன்று அல்லது இரண்டு தான் வரும். நீ தினமும் சீரியலில் மக்கள் முன்பு வந்து கொண்டே இருக்கிற... நீ இந்த மாதிரியே பண்ணிட்டு இருந்த மக்களுக்கே குழப்பம் வரும் என்று சொல்லி இருக்கிறார் என்று ஏற்கனவே ஒரு பேட்டியில் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications