ஹாஸ்பிடலுக்கு அதிரடியாக போன முதல்வர் விஜய்.. அங்கு இப்படியா செய்யணும்? விளாசிய ப்ளூ சட்டை மாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு திடீரென ஆய்வு செய்தது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை எப்படி வழங்கப்படுகிறது? நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் கிடைக்கிறதா? என்பதை ஆய்வு செய்வதற்காக அவர் அங்கு அதிரடியாக எண்ட்ரி கொடுத்தார். ஆனால் இது குறித்து ப்ளூ சட்டை மாறன் இப்போது தன்னுடைய ஆதங்கத்தை போஸ்டில் கொட்டி இருக்கிறார்.

மகப்பேறு ஹாஸ்பிடலுக்கு வந்த முதல்வர் அங்கு சிகிச்சை பெற்று வந்த தாய்மார்களிடம் நலம் விசாரித்ததோடு, டாக்டர்களிடமும் அதிகாரிகளிடமும் பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். புதிதாக பிறந்த குழந்தைகளை கையில் தூக்கி கொஞ்சிய புகைப்படங்களும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வேகமாக வைரலானது. நேற்றிலிருந்து இந்த செய்தி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Vijay Blue Sattai Maran

முதல்வர் மருத்துவமனை ஆய்வு

இதற்கு முன்பு இருந்த முதல்வர்கள் இதுபோல திடீர் ரெய்டு நடத்தவில்லையே என்று கூட சிலர் சொல்லி முதல்வரை பாராட்டி வருகின்றனர். ஆனால் இந்த ஆய்வின் போது தான் ஹாஸ்பிடல் வளாகத்துக்குள் வேற ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது. அதுதான் பலருக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது முதலமைச்சரை நேரில் பார்க்க ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் திரண்டு விட்டனர்.

முதல்வர் விஜய் ஆய்வு

முதலமைச்சர் ஹாஸ்பிடல் வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் அங்கு கூட்டம் கூட தொடங்கி விட்டது. போலீசார் எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றாலும் பலர் விஜய்யின் பெயரை சத்தமாக கூறி ஆரவாரம் செய்தனர். இதனால் சில நிமிடங்கள் அந்த பகுதி தியேட்டரில் திரைப்படத்தின் முதல் நாள் காட்சி கொண்டாட்டம் போலவே தெரிகிறது என்று பலர் சோசியல் மீடியாவில் திட்டி வருகின்றனர்.

Vijay Blue Sattai Maran

ப்ளூ சட்டை மாறன் பதிவு

இந்த வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய பதிவில், குழந்தைகள் நல மருத்துவமனையில் இப்படி FDFS தியேட்டரில் கூச்சல் போடுவது போல கத்துவது என்ன நாகரீகம்? மருத்துவமனைக்கே இந்த கதியா? இதை எப்படி விஜய் அனுமதிக்கிறார்? இனி இது போன்ற நிகழ்வு நடக்கவே கூடாது. அடிப்படை அறிவை பிரயோகிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் கருத்து

இந்த பதிவு வெளியானதும் சமூக வலைதளத்தில் பலர் தங்களுடைய கருத்துக்களையும் தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் ஹாஸ்பிடல் என்பது அமைதிக்காக வேண்டிய இடம் அங்கே பலர் வலி வேதனையுடன் அமர்ந்திருக்கும் போது இதுபோன்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்வது தவறு, அதுவும் பிஞ்சு குழந்தைகள் இருக்கும் இடத்தில் இப்படியாக கத்துவது? அந்த குழந்தைகளே பயந்து விடுமே என்று கூறி வருகின்றனர்.

Vijay Blue Sattai Maran

இன்னும் ஒரு சிலர் முதல்வர் எப்படி ரைடு போனதுதான் சரி, அப்போ தானே எல்லா அரசு அதிகாரிகளுக்கும் பயம் இருக்கும்? பொதுவாக இப்போது பல கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் அடிப்படை வசதிகளும், நோயாளிகளுக்கு சரியான மரியாதையும், சிகிச்சையும் இல்லாமல் தான் இருக்கிறது. அதனால் முதல்வர் இப்படி நேரடியாக களம் இறங்கி இருப்பது பலருக்கு பயத்தை ஏற்படுத்தும். இனியாவது கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் நல்லது நடந்தால் சரி என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+