நீங்கள் கடனை முழுவதுமாக கட்டியும் சிபில் அப்டேட் ஆகவில்லையா.. என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிபில் கடந்த மாதம் 26ம் தேதி அப்டேட் ஆகி உள்ளது. இனி 33 நாட்கள் கழித்தே அப்டேட் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது தான் பழைய கடன்கள் முடிந்தது எல்லாம் தெரியுமா.. இடையில் நிறுவனங்கள் அப்டேட் செய்யாதா என்று நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். என் நண்பரை போன்றே பலருக்கும் சிபில் ஸ்கோர் எப்படி அப்டேட் செய்கிறார்கள். அவருடைய கிரெடிட் ரிப்போர்ட் எப்படி அப்டேட் ஆகிறது என்பது குறித்த சந்தேகம் இருக்கம் என்பதால், அவருக்கு அளித்த விளக்கத்தை தற்போது இந்த பதிவில் பார்ப்போம்.

பொதுவாக நீங்கள் ஒரு கடனை அடைக்கிறார்கள் என்றால், அந்த கடனை அடைத்த உடன் உங்களுக்கு இரண்டு நாளில் அல்லது மறுநாளே கடனை அடைத்ததற்கான என்ஓசி சான்றிதழை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிவிடும். அதேநேரம் கார் லோன் உள்பட வாகன கடன் என்றாலும் ஒரு வாரம் வரையிலும் ஆகலாம். எனினும் வங்கிகளும், பிற நிதி நிறுவனங்களும் நீங்கள் கடனை கட்டிய விவரத்தை உடனே சிபில் நிறுவனத்திற்கு தகவலாக அனுப்ப மாட்டார்கள். எனினும் ஒவ்வொரு மாதத்திற்கு ஒருமுறை தான் தங்களின் அனைத்து வாடிக்கையாளர்களின் மொத்த தகவல்களையும் சிபில் அமைப்பிற்கு அனுப்பி வைப்பார்கள.

CIBIL score

எனவே வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் தகவல்களை பெற்றுக்கொண்ட, சிபில் நிறுவனம் அந்த தகவல்கள் அனைத்தையும், 30 முதல் 45 நாட்களில் ஏற்றிவிடும். எனினும் இப்போது எல்லாம் 15 நாட்களிலேயே அப்டேட் செய்வதும் நடக்கிறது. ஆனால் பொதுவாக 33 நாட்கள் கழித்தே அப்டேட் ஆவதாக நம்மிடம் பேசிய நண்பர் உள்பட பலர் கூறியிருந்தார்கள்.

எனினும் நண்பர் கேட்டது போலவே, நீங்கள் ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டார், அது இந்த மாத இறுதியில் தான் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் சிபில் நிறுவனத்திற்கு அந்த விவரங்களை தகவல்களாக அனுப்பி வைக்கும். எனவே சிபில் நிறுவனம் அதனை அடுத்த மாதம் அப்டேட்டில் காட்டுகிறது. ஆகவே நண்பர் கூறியது போலவே, அவரது சிபில் ரிப்போர்ட் அடுத்த 33 நாட்கள் கழித்து வந்தது. அந்த புதிய அப்டேட்டில் தான் அவர் அடைத்த அனைத்து கடன் விவரங்களும் தெரிகிறது.இதில் இன்னொரு ட்விஸ்ட்சும் இருக்கிறது. உங்கள் கடன் அடைக்கப்பட்ட விவரம் அப்டேட் ஆகத்தான் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அப்டேட் உடனே ஆகிவிடும். அதாவது வெறும் 15 நாட்களில் கூட உங்கள் கடன் விவரம் சிபிலில் தெரியும்.

அதே நேரம் நீங்கள் கடனை சரியாக கடனை கட்டி முடித்துவிட்டால், அந்த வங்கியிடம் இருந்து 'No Objection Certificate' அதாவது என்ஓசி வங்கி கொள்ளுங்கள். உங்களுக்கு வேறு எங்கும் கடன் தேவைப்பட்டால், சிபிலில் அப்டேட் ஆகும் வரை காத்திருக்காமல், இந்த NOC கடிதத்தை புதிய வங்கியில் காட்டி உங்களது கடன் தகுதியை நிரூபிக்கலாம்.

ஒரு வேளை வங்கி உங்களது கடனை முடித்துவிட்டதாகத் தகவல் அனுப்பியும், சிபிலை அப்டேட் செய்யாவிட்டால், நீங்களே நேரடியாக சிபில் தளத்தில் புகார் அளிக்கலாம். சிபில் இணையதளத்தில் NOC நகலை இணைத்து ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.. சிபில் நிறுவனம் வங்கியிடம் அதை சரிபார்க்கும்... 30 நாட்களுக்குள்ளாகவே உங்களது ரிப்போர்ட்டை அப்டேட் செய்வார்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+