OTT: இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? வீக் எண்ட்க்கு ரெடியான படங்கள்.. இத்தனை ஹிட் மூவி இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிஸியான லைஃபில் உங்களுக்கு தியேட்டருக்கு போக நேரம் இல்லையா? அல்லது இந்த வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வீட்டிலேயே குடும்பத்துடன் செலவிட போறீங்களா? அப்படியானால் இந்த வாரம் ஓடிடியில் (OTT Releases) வெளியாகும் படங்களில் பட்டியல் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ், ஸ்போர்ட்ஸ் என எல்லா ரகமான ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இந்த வாரம் பல புதிய படங்களும், வெப் சீரிஸ்களும் வெளியாக இருக்கிறது. அதை விரிவாக பார்ப்போம் வாங்க.

OTT Releases Netflix ZEE5 Amazon Prime Video Sony LIV JioHotstar

பெத்தி திரைப்படம்

இந்த வாரம் அதிகம் எதிர்பார்ப்போடு பேசப்படுவது ராம்சரண் நடித்த பெத்தி திரைப்படம் தான். தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த படம் ஜூலை 9 முதல் நெட்ப்ளிக்ஸில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

OTT Releases Netflix ZEE5 Amazon Prime Video Sony LIV JioHotstar

பரிமளா அண்ட் கோ

அதேபோல் சமீபத்தில் தியேட்டரில் அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து வசூலை அள்ளிய பரிமளா அண்ட் கோ திரைப்படமும் ஜூலை 10ஆம் தேதி முதல் ஜி5ய-ல் ஸ்ட்ரீம் ஆகிறது. காமெடி, க்ரைம் கலந்த இந்த படம் தியேட்டரில் தவறவிட்டவர்களுக்கு ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும்.

OTT Releases Netflix ZEE5 Amazon Prime Video Sony LIV JioHotstar

லேண்ட் ஆஃப் ஃபுட்பால்

காதல், க்ரைம் மட்டுமல்ல எங்களுக்கு ஸ்போர்ட்ஸ்ம் பிடிக்கும் என்று விரும்பும் ரசிகர்களுக்காகவே இந்த வாரம் இரண்டு முக்கிய படங்கள் வெளியாகிறது. மலையாளத்தில் உருவான லேண்ட் ஆப் புட்பால் (Land Of Football) வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. ஃபுட் பாலை மையமாக வைத்து உருவான இந்த சீரியஸில் விளையாட்டையும், எமோஷனலையும் இணைத்து சொல்லும் புது முயற்சியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல கபடியை மையமாகக் கொண்டு உருவான பால்ட்டி (Balti) திரைப்படமும் சோனி லைவ்வில் வெளியாகிறது

Katta Kusthi 2 ott: ஓடிடியில் வெளியாகும் 'கட்டா குஸ்தி 2'.. எப்போ, எதில் பார்க்கலாம்? வெளியான தகவல்
சமீபகாலமாக ஓடிடி தளங்கள் தியேட்டரில் வெளியான படங்களை கொஞ்சம் நாட்களிலேயே ரசிகர்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. அதனால் தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டோமே குடும்பத்தோட போய் பார்க்க முடியவில்லையே என்று ஃபீல் பண்றவர்களுக்கு வீட்டிலேயே இருந்து பல புதிய படங்களையும் பார்க்கலாம். ஆனால் நாங்கள் இணைந்த படத்தை சும்மாவா பார்க்க முடியும் இதுக்கும் பணத்தை கட்டி சப்ஸ்கிரைப் பண்ணி தானே ஆகணும்னு நீங்க கேட்கிறது புரிகிறது.. சரி இந்த வாரம் என்ன படம் பார்க்க போறீங்க பாஸ்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+