சைலண்டாய் வேலை பார்த்த சிவி சண்முகம்.. வேலையை ஆரம்பித்த வேலுமணி! எடப்பாடிக்கு ஜெர்க் கொடுத்த மெசேஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறது அதிமுக. எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தலில் யாருமே இல்லாமல் வென்றுவிடலாம் என நினைக்கிறார். இந்த நிலையில் சத்தமில்லாமல் அதிமுகவில் சில வேலைகளை எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் பார்த்து வருவதாக சொல்கின்றனர். குறிப்பாக அதுகுறித்த தகவல்களை வெளியே கட்சியை விடாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்கள் செயல்பட்டு வந்த நிலையிலும், மெசேஜ் லீக்கானதால் எடப்பாடி தரப்பு பதற்றத்தில் ஆழ்ந்துள்ளதாம்..

தமிழகத்தில் மிக பலம் பொருந்திய கட்சிகளில் ஒன்று என அதிமுகவை குறிப்பிடலாம். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கம், இரட்டை இலை என்ற மாபெரும் சின்னம், தமிழக முழுவதும் கட்சி கட்டமைப்பு, தமிழகத்தை அதிக முறை ஆண்ட கட்சி, இல்லையென்றால் எதிர்க்கட்சி என சொல்லிக் கொண்டே போகலாம்..

AIADMK

ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை. ஜெயலலிதா இருந்தவரை ராணுவ கட்டுப்பாட்டோடு இருந்த இயக்கம் அதற்கு பிறகு உடைந்து போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தனக்கு பிறகான அரசியல் தலைவர்களை அல்லது வாரிசை ஜெயலலிதா அறிவிக்காமல் இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்..

அதிமுக

அதனால் தான் அதிமுகவில் அதிகார போட்டி உருவாகி தற்போது பல அணிகளாக சிதறுண்டு கிடக்கிறது. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என ஒரு பெரும் படையே அதிமுகவிலிருந்து வெளியேறி இருக்கிறது அல்லது வெளியேற்றப்பட்டு இருக்கிறது. அதோடு முடிந்துவிடவில்லை, 2026 தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக அதன் முக்கிய தளபதிகளை இழந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய முகங்களாக இருந்த பல தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

சி விஜயபாஸ்கர்

குறிப்பாக எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், கடம்பூர் ராஜு என சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை தான் கூட்டணி வேட்பாளர் தேர்வு என எதிலுமே எடப்பாடி பழனிச்சாமி தங்களை கேட்பதில்லை அவரே முடிவெடுக்கிறார். அதனால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

சி.வி சண்முகம்

இந்நிலையில் ஏற்கனவே சொன்னது போல பலர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விட்டனர். ஆனால் சி.வி சண்முகம், எஸ் பி வேலுமணி ஆகியோர் எடப்பாடி மீது அதிருப்தியில் இருப்பது அப்பட்டமாக தெரிந்தாலும் அவர்கள் இன்னும் கட்சியை விட்டு விலக வில்லை. எடப்பாடியும் நீக்கவில்லை. கட்சியை விட்டு நீக்கினால் அவர்கள் மிக எளிதாக எந்தவித நடவடிக்கைக்கும் உட்படாமல் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விடுவார்கள் என்பதால் தான் அவர்களின் அடிப்படை உறுப்பினர் பதவியை விட்டு வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடி பழனிச்சாமி

அதே நேரத்தில் அவர்களும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதற்கு இடையே தற்போது வெளியாகியிருக்கும் தகவல் தான் எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதாவது அதிமுகவில் இருக்கும் மாவட்ட செயலாளரிடம் ஏற்கனவே 40 சதவீதத்திற்கும் மேல் சிவி சண்முகம் தரப்பு கையெழுத்து பெற்றிருந்தது. அது தெரிந்து தான் சில மாவட்ட செயலாளர்களை மாற்றினார் எடப்பாடி. இந்த நிலையில் மாவட்ட செயலாளர் தவிர்த்து பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களை தொடர்பு கொண்டு ஏராளமானோரிடம் சிவி சண்முகமும் எஸ்பி வேலுமினியும் கையெழுத்து வாங்கி இருக்கிறார்களாம்.

பொதுக்குழு

விரைவில் பொதுக்குழுவை கூட்டி பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் அல்லது எடப்பாடி விலக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டு இருக்கிறார்களாம். இதற்கான நகர்வுகள் மிக ரகசியமாக இருந்த நிலையில் எடப்பாடி தரப்புக்கு விசுவாசமாக இருந்த சிலர் இதுகுறித்து அவர்களிடம் தெரிவித்துள்ளாராம். தற்போது இந்த தகவல் கசிந்துள்ள நிலையில் அதிர்ச்சியில் இருக்கிறார் எடப்பாடி என்கின்றனர் அதிமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+