நான் சொல்லித்தான் டிவிஏசிக்கு போஸ்டிங் போட்டாங்களா? சாதி புத்தியின் வெளிப்பாடு.. திருமாவளவன் பேச்சு
சென்னை: நான் சொல்லித்தான் டிஜிபியை போட்டாங்க.. நான் சொல்லித்தான் டிவிஏசியை போட்டாங்க என்று பரப்புறாங்க.. இதெல்லாம் தவறான தகவல். அந்த அதிகாரி தலித் என்றால் நான் சொன்னேன் என்று அர்த்தமா? தலித்திற்கு மட்டும் தான் நான் சொல்வேனா.. அவுங்க பார்வையை பாருங்க.. சாதி புத்தி இது. என்று திருமாவளவன் பரபரப்பாக பேசியுள்ளார்.
விசிக தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:-
வயிற்றெரிச்சல் தாங்க முடியாது அவன் இவன்னு பேசுறாங்க.. நான் சொல்லித்தான் டிஜிபியை போட்டாங்க.. நான் சொல்லித்தான் டிவிஏசியை போட்டாங்க என்று பரப்புறாங்க.. இதெல்லாம் தவறான தகவல். யாருக்கும் நான் சொல்லல.. நான் சொல்லியும் போடல.. அது உண்மையும் இல்லை. அந்த அதிகாரி தலித் என்றால் நான் சொன்னேன் என்று அர்த்தமா? தலித்திற்கு மட்டும் தான் நான் சொல்வேனா.. அவுங்க பார்வையை பாருங்க.. சாதி புத்தி இது.

சாதி புத்தியில் வரும் வெளிப்பாடு
சாதி புத்தியில் இருந்து வரக்கூடிய வெளிப்பாடு அது. நான் இதுவரையிலும் 40 வருஷமாக களத்தில் இருக்கிறேன். சாதி அடிப்படையில் எந்த அதிகாரியையும் நான் அணுகியது கிடையாது. எந்த சாதி என்று தெரிந்து கொண்டதும் கிடையாது. சொல்லப்போனால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை வைத்துக்கொண்டே நான் மேடையில் பேசுவேன்.. ஆடு மாடு மேய்க்கிறவர்களை நிற்கவில்லை என்று பல மேடைகளில் பேசியிருக்கிறேன். இன்றைக்கும் கட்சி நடத்துவதற்கு சாதாரண தொண்டர்கள், உழைக்கிறவர்கள்தான் உதவுகிறார்களே தவிர ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்தவர்கள் உதவவில்லை.
எனக்கு யாரும் வழிகாட்டவில்லை. சிந்தனையாளர்கள் மன்றம் அப்படி என்பதெல்லாம் விசிகவில் கிடையாது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாரும் அந்தந்த சாதி அடிப்படையில் ஒன்றாக சேர்ந்துவிடுவார்கள். மருத்துவர்கள் ராமதாஸ் கட்சி நடத்துகிறார்க்ள் என்றால் அந்த சமூகத்தை சார்ந்த ஓய்வு பெற்ற ஐஏஸ் அதிகாரிகள் அவர் பின்னால் இருப்பார்கள். அவருக்கு பட்ஜெட் எழுதி கொடுப்பார்கள். அறிக்கை எழுதி கொடுப்பார்கள். ஆலோசனைகள் சொல்வார்கள்.. இது மாதிரி எல்லாம் இருக்கும்.
நீங்க முதல்வர் ஆக ஆசைப்படவில்லையா?
ஆனால் என் பின்னால் யாராவது ஒரு ஐஏஸ் அதிகாரி வந்து பார்த்து இருக்கீங்களா? நானும் அவங்களை தேடி போனது இல்லை. யார்கிட்டயும் போய் ஆலோசனை கேட்டது இல்லை. கேட்டது இல்லை என்றால் அது எனக்கு தேவைப்படவில்லை. மக்களுக்கான தேவைக்காக மட்டுமே நான் போராடுகிறேன். பெரிய திட்டம், கால்குலேஷன்லாம் எனக்கு கிடையாது.
என்னை பலபேர் கேட்டார்கள். ஏன் நீங்க முதல்வர் ஆக ஆசைப்படவில்லையா? 25 வருடம் முன்பாகவே கேட்டார்கள். மக்களால் பார்த்து இந்த திருமாவளவனுக்கு இந்த தகுதி இருக்கிறது என்று காலம் வரும். அதுவரைக்கும் உழைப்பது மட்டும்தான் எனது வேலை.. பாடுபடுவது மட்டும்தான் எனது வேலை.. நானே என்னை வந்து ஒரு பிராண்ட் பண்ணிக்க மாட்டேன். என்று கூறினார்.














Click it and Unblock the Notifications