சென்னையில் பல்வேறு இடங்களில் திடீர் மழை.. சுட்டெரித்த வெயிலுக்கு நடுவே ஜில் ஆக மாறிய கிளைமேட்
சென்னை: சென்னையில் இன்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் திடீரென மழை கொட்டியது. சென்னை அண்ணாசாலை, போரூர், பூந்தமல்லி, மாங்காடு, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னை மட்டுமின்றி திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. திடீரென கொட்டிய மழையால் சற்று வெப்பம் தணிந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாவே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை நேரங்களில் மழை பெய்து வந்தது.

இன்று தலைநகர் சென்னையில் வெயில் வாட்டி வதைத்தது. திடீரென மாலை 5 மணியளவில் கிளைமேட் அப்படியே மாறியது. கருநிற மேகம் திரண்டு திடீரென சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் மழை கொட்டியது. சென்னை அண்ணாசாலை, போரூர், பூந்தமல்லி, மாங்காடு, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதே போன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மாலையில் பெய்த மழையால் சென்னையில் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications