அனுபவம் வேண்டாம்.. 2026ல் படிப்பு முடித்தவரா? டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை ரெடி.. ஜூலை 22 கடைசி நாள்
சென்னை: 2026ம் ஆண்டில் பிசிஏ, பிஎஸ்சி டிகிரி முடித்தவர்களுக்கான பிரத்யேக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு டிசிஎஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜூலை 22 கடைசி நாளாகும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் TCS B.Sc Ignite Hiring Batch2026 என்ற பெயரில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. 2026ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், டேட்டா சியன்ஸ், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், இயற்பியல், வேதியியல், எலக்ட்ரானிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, பயோகெமிஸ்ட்ரி, B.Voc பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோர் அரியர்ஸ் இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் செலக்ஷன் நடக்கும்போது அரியர்ஸ் இருக்க கூடாது. விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும் TCS BSc Ignite என்பதை பொறுத்தவரை சயின்ஸ் மற்றும் சாப்ட்வேர் புரோகிராம் பயிற்சி வழங்கப்படும். சாப்ட்வேர் இன்ஜினியரிங் பணிக்கான பயிற்சிகள் கூட வழங்கப்படும்.
தற்போதைய அறிவிப்பின்படி Cloud, Blockchain, AR/VR/XR, AI/ML/GenAI, robotics, Digital Engineering உள்ளிட்டவை சொல்லி தரப்படும். அதோடு கிராசூவேட் இன்ஜினியரிங் டீமுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி உயர் படிப்புக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். அதாவது இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழங்களில் PG டிகிரி முடிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இவை அனைத்தும் TCS Ignite முறையில் பணியில் சேர விரும்புவோருக்கு கிடைக்கும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 22ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கான பதிவு TCS NextStep Portal மூலமாக நடக்கும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி தேர்வு நடைபெறும். தேர்வு மையங்களில் வைத்து தேர்வு என்பது நடத்தப்படும். தேர்வு என்பது 2 மணிநேரம் இருக்கும். இந்த தேர்வு மைய ஒதுக்கீடு என்பது First Come First Serve முறையில் நிரப்பப்பட உள்ளது.
அதாவது ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் முதலில் விண்ணப்பம் செய்வோருக்கு மட்டுமே அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைக்கும். தாமதமாக விண்ணப்பம் செய்யும்போது அவர்கள் விரும்பும் தேர்வு மையம் கிடைக்காமல் தூரத்தில் உள்ள தேர்வு மையம் கிடைக்கும் நிலை உருவாகலாம். மேலும் தேர்வு மையத்தை ஒருமுறை தேர்வு செய்தால் மாற்றம் செய்ய முடியாது. இதனால் கவனமுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தேர்வுக்கான மாடல் வினாத்தாள் அதிகாரப்பூர்வ அறிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி தயாராகி இருந்தாலே பணிக்கு தேர்வாகலாம். இந்த தேர்வில் Numerical Ability, Verbal Ability, Reasoning Ability, Coding (Optional) அடிப்படையில் கேள்விகள் என்பது இருக்கும்.
விண்ணப்பம் செய்வது தொடர்பான முழுவிபரம் கீழே உள்ள லிங்க் மூலம் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகங்கள் ஏதுவும் இருப்பின் [email protected], Toll free - 18002093111 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பம் செய்வதற்கான முழுவிவரம் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதனை பார்த்து படித்து தவறின்றி விண்ணப்பம் செய்யலாம்.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications