"0" இடைநிற்றல்.. கல்வியில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு “டாப்”.. மத்திய அரசின் அறிக்கையில் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக் கல்வியின் முக்கியக் குறியீடுகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருப்பதாக UDISE+ அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த கல்வி ஆண்டில், தொடக்கக் கல்வியிலும், நடுநிலை வகுப்புகளிலும் தமிழ்நாட்டில் இடைநிற்றல் பூஜ்ஜியம் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் 'கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு' (UDISE) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, குறைவான இடைநிற்றல், ஆசிரியர் இருப்பு, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி முன்னேற்றம் என ஏறக்குறைய அனைத்து முக்கிய குறியீடுகளிலும் தமிழ்நாடு தேசிய சராசரியை விடச் சிறப்பாக செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tamil Nadu Leads School Education Records Zero Dropout Rate in Primary and Middle Schools

கல்விக்கான வாய்ப்பை உறுதி செய்வதோடு, மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர பலதரப்பட்ட மற்றும் உயர்தரமான வழிகளையும் வழங்கும் கல்விச் சூழல் தற்போது மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்தப் பள்ளிகளில் 3.9 சதவீத பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும், பள்ளி செல்லும் குழந்தைகளில் 5 சதவீதத்தினருக்குத் தமிழ்நாட்டில் கல்வி வழங்கப்படுவது மத்திய அரசின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 57,566 பள்ளிகளில், 1,24,02,872 மாணவர்கள் மற்றும் 5,69,909 ஆசிரியர்கள் உள்ளனர். இங்கு மாணவர்-ஆசிரியர் விகிதம் 22 ஆக உள்ளது. இது தேசிய சராசரியான 24-ஐ விட அதிகமாகும். தேசிய அளவில் ஒரு பள்ளிக்கு சராசரியாக 169 மாணவர்கள் என்ற நிலையில், தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் சராசரியாக 215 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உள்ளனர். நாட்டின் பெரும்பாலான பகுதிகளை விட தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் நீண்ட காலத்திற்கு தங்கள் கல்வியைத் தொடர்கின்றனர்.

மேலும் தமிழ்நாடில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதங்கள் தொடக்கக் கல்வியில் 92 சதவீதமாகவும், உயர் தொடக்கக் கல்வியில் 95 சதவீதமாகவும், இடைநிலைக் கல்வியில் 97 சதவீதமாகவும், மேல்நிலைக் கல்வியில் 85 சதவீதமாகவும் உள்ளதாக மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது. இது முறையே, தேசிய சராசரியான 89, 90, 82 மற்றும் 62-ஐ விட அதிகமாகும்.

தமிழ்நாட்டில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலைகளில் பள்ளி இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியமாகப் பதிவாகியுள்ளது. அதே சமயம், இடைநிலைக் கல்வியில் இடைநிற்றல் விகிதம் 6.2 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது 9.5 சதவீதம் என்ற தேசிய சராசரியை விடக் கணிசமாகக் குறைவாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+