திருச்செந்தூர் புதிய பஸ் நிலையம் தொடர்பாக பொதுநல வழக்கு.. தூத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ்
தூத்துக்குடி: திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ரூ.18.10 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடக்கத்தில் கீழத்திருச்செந்தூர் மாட்டுத்தாவணி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் திடீரென மேலத்திருச்செந்தூர் குமாரபுரம் பகுதிக்கு இந்த திட்டத்தை மாற்றுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கக்கோரி பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் கோயிலில் இருந்து கூப்பிடும் தூரத்தில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டித்தான் பேருந்து நிலையம் இருக்கும். இந்த பேருந்து நிலையம் முருகன் கோயிலில் இருந்து ஒரு கிமீக்கும் சற்றே தூரத்தில் இருக்கிறது. எனவே எளிதாக கோயிலுக்கு பக்தர்கள் வருகிறார்கள். இந்நிலையில் பேருந்து நிலையத்தை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொதுநல வழக்கு போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், " திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ரூ.18.10 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. தொடக்கத்தில் கீழத்திருச்செந்தூர் மாட்டுத்தாவணி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் திடீரென மேலத்திருச்செந்தூர் குமாரபுரம் பகுதிக்கு இந்த திட்டத்தை மாற்றுவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பொதுமக்களிடம் எந்த கருத்து கேட்டும் நடத்தவில்லை. திருச்செந்தூர் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு தேர்வான இடம் 1.5 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. அதன் அருகிலேயே 6.5 ஏக்கருக்கும் மேற்பட்ட காலியிடம் இருக்கிறது ஆனால் மாற்று இடத்தில் தேவையான இடம் இல்லை. மேலும் மேலத்திருச்செந்தூரில் புதிய பஸ் நிலையம் அமைந்தால், அங்கு இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பயணிகள் பல்வேறு வகையில் கடும் அவதிக்கு ஆளாவார்கள்.
எனவே திருச்செந்தூர் குமாரபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டு அறிக்கையாக தாக்கல் செய்யவும், கீழத்திருச்செந்தூர் மாட்டுத்தாவணியில் புதிய பஸ் நிலையத்தை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் வக்கீல் ராம்குமார் ஆதித்தன் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.


Click it and Unblock the Notifications
