சட்டசபைக்கு ஆளுநர் ரவி வருவது இதுவே கடைசியாக இருக்கும்! ஈவிகேஎஸ் இளங்கோவன் தடாலடி- ஏன் அப்படி சொன்னார்
சென்னை: ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகக் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் அடுத்த வாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காகத் தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் தொடங்கும்.

அதன்படி இந்தாண்டும் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான இது ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்று காலை அனைத்து உறுப்பினர்களும் கூடியிருந்த நிலையில், ஆளுநர் ரவியும் அவைக்கு வந்தார். ஆனால், அதன் பிறகு அங்கு நடந்தது வேறாகவே இருந்தது.
ஆளுநர் ரவி: ஆளுநர் உரை என்பது அரசின் பாலிசி உரை என்று வைத்துக் கொள்ளலாம். இதை ஒவ்வொரு ஆண்டும் அரசு தான் தயார் செய்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பும். சட்டசபை கூடும் நாளில் அதை ஆளுநர் வாசிப்பார். அதுதான் மரபு.. ஆனால், இந்த உரையில் இருக்கும் சில கருத்துகளில் உடன்பாடும் இல்லை என்று கூறிய ஆளுநர் ரவி, இதை வாசித்தால் அரசியல் சாசன பதவியை கேலிக்குள்ளாக்குவதாக அமையும் எனச் சொன்னார்.
மேலும், தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் வாசிக்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து தான் கோரிக்கை விடுத்த போதிலும் அதை ஏற்காமல் தேசிய கீதத்தைப் புறக்கணித்ததாக கூறினார். இந்த இரு காரணங்களையும் குறிப்பிட்ட ஆளுநர் ரவி, இந்த அவையில் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்க வேண்டும் என மட்டும் சொல்லி தனது உரையை முடித்துக் கொண்டார்.
தலைவர்கள் கருத்து: இந்த இரண்டு காரணங்களையும் குறிப்பிட்ட ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்கவே இல்லை.. தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் விடுவது இதுவே முதல்முறை. ஆளுநர் தனது உரையை வாசித்து இருக்க வேண்டும் என்று இந்த செயலுக்கு ஆளும் தரப்பினர் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதுவே கடைசி: இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் சட்டசபை வளாகத்தில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "என்னைப் பொறுத்தவரை ஆளுநர் ரவி சட்டசபைக்கு வருவது இதுவே கடைசியாக இருக்கும்.. இனிமேல் அவர் இந்த அவைக்கு வர வாய்ப்பு கிடையாது.. காரணம் தேர்தல் முடிந்த உடன் இவரைத் தூக்கி எறிவார்கள்.
தமிழ்நாட்டில் எப்போதும் எந்த நிகழ்விலும் தேசிய கீதம் என்பது நிகழ்ச்சி முடிந்தவுடன் தான் வாசிப்பார்கள். இது கூட தெரியாத ஒரு ஆளுநர்.. தேசிய கீதம் பட வேண்டும் எனச் சொல்வது அவரது அறியாமையைத் தான் காட்டுகிறது. இப்படி அவர் செய்வதற்குப் பதிலாக அவர் வாராமலேயே இருந்து இருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார். அதாவது தேர்தல் முடிந்த பிறகு மத்தியில் புதிய அரசு அமையும் என்றும் அதன் பிறகு ஆளுநர் ரவி நீக்கப்படுவார் என்பதையே ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார்.
முன்னதாக ஆளுநர் ரவி உரையை வாசிக்க மறுத்த நிலையில், உரையின் தமிழாக்கத்தைச் சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். மேலும், அரசு தயார் செய்து தந்த உரையில் இருந்தது மட்டுமே அவை குறிப்பில் இடம் பெறும் என்று அமைச்சர் துரைமுருகன் தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications