அண்ணே அண்ணே.. ஸ்டாலின் அண்ணே.. நம்ம ஊரு நல்ல ஊரு.. ஆர்ப்பாட்டத்தில் பாட்டு பாடி ஜெயக்குமார் கலகலப்பு
சென்னை: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக நடத்திய போராட்டத்தின் போது "அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே" பாடலை சிப்பாய்க்கு பதிலாக முதல்வர் ஸ்டாலின் பெயரை போட்டு பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. கடந்த சட்டசபை தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ 100 மானியம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைத் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக கொடுத்தது.

திமுக அரசை கண்டித்து
இந்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. மேலும் போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது, அரசியல் காழ்ப்புணர்ச்சி என அதிமுக விமர்சனம் செய்தது.

திமுக வாக்குறுதிகள்
இந்த நிலையில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி இன்று காலை 10 மணிக்கு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். கைகளில் பதாகைகளுடன் கவன ஈர்ப்பு முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது திடீரென அவர் பாட்டு பாடி கலகலப்பூட்டினார்.

திரைப்பட பாடல்
இதுகுறித்து அவர் தனது ட்வீட்டில் கூறுகையில் போராட்டத்தின் போது திடீரென இந்த திரைப்பட பாடல் நினைவிற்கு வந்தது...👇
அண்ணே அண்ணே..
ஸ்டாலின் அண்ணே..
நம்ம ஊரு நல்ல ஊரு...
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே...
அத சொன்னா வெட்கக்கேடு நான் சொல்லாட்டி மானக்கேடு.... என பாடினார். பொதுவாக ஜெயக்குமார் நன்றாக பாட்டு பாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications