இது தான் செம திருப்பம்! அணி மாறிய ஓபிஎஸ் "வலதுகரம்.." அப்போ டெல்லி ஆதரவு எடப்பாடிக்குதான்?
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தை நம்பிச் சென்று தங்களது அரசியல் இருப்பை தொலைத்துக் கொண்டவர்களில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் ஒருவர்.
அதனால் தான் இனியும் ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து அவருக்கு குட் பை சொல்லிவிட்டு எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து வணங்கி ஆதரவு தெரிவித்துள்ளார் மாஃபா.
நாளுக்கு நாள் தனது டீமில் இருந்து முக்கியப் பிரமுகர்கள் அணி தாவுவதால் ஓ.பன்னீர்செல்வம் கடுமையான அப்செட்டில் இருந்து வருகிறார்.

நம்பிச் சென்றார்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017-ஆம் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தத்தின் போது அவருக்கு முதல் ஆதரவு கொடுத்த அமைச்சர்களில் மாஃபா பாண்டியராஜனும் ஒருவர். இதனால் அவருக்கு மிஞ்சியது ஜெயலலிதா கொடுத்த பள்ளிக்கல்வித்துறையை அமைச்சர் பதவியை இழந்து மட்டுமே. ஆம், ஓபிஎஸ் இபிஎஸ் ஒரே அணியாக இணைந்த போது தன்னை நம்பி வந்த மாஃபா பாண்டியராஜனுக்கு மீண்டும் பள்ளிக்கல்வித்துறை ஓ.பன்னீர்செல்வம் வாங்கிக் கொடுக்கவில்லை. போனால் போகிறது என தனது வசம் இருந்த தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறையை கொடுத்தார் ஓ.பன்னீர்செல்வம்.

மாஃபா பாண்டியராஜன்
இது அப்போதே மாஃபா பாண்டியராஜனுக்கு அதிருப்தியை கொடுத்தாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஓபிஎஸ் அண்ணன் ஓபிஎஸ் அண்ணன் என அவரைச் சுற்றி சுற்றி வந்தார் மாஃபா. விருதுநகரிலோ அல்லது திருவள்ளூரிலோ மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்த அது தொடர்பான தனது விருப்பத்தையும் ஓ.பன்னீர்செல்வத்திடம் முறையிட்டிருக்கிறார். பார்த்துக்கலாம் பார்த்துக்கலாம் எனக் கடைசி வரை கூறிய ஓபிஎஸ் அந்த விவகாரத்திலும் தன்னை நம்பி வந்தவருக்கு எதுவும் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மலைபோல் நம்பி
ஆனால் மாஃபா ஓ.பன்னீர்செல்வத்தை மலை போல் நம்பி தொடர்ந்து ஆதரவுகரம் நீட்டி வந்தார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது பல வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவை கவனிக்கும் பொறுப்பை ஏற்றது அதிமுக தலைமை. தனது தேர்தல் செலவுக்கும் பணம் வேண்டும் எனக் கேட்டு ஓ.பன்னீர்செல்வத்திடம் நின்றார் மாஃபா பாண்டியராஜன். ஆனால் அப்போதும் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து நயா பைசா கொடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அவர், அந்த தேர்தலில் ஒரு வழியாக தோல்வியையும் தழுவினார்.

ஹைவோல்ட் ஷாக்
அப்போதோவது மாஃபா பாண்டியராஜன் அணி மாறுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது போல் செய்யாமல் மொத்தமாக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி தொழிலை கவனிக்கச் சென்றார். இதனிடையே மாஃபா பாண்டியராஜன் எப்படியும் தன்னைத் தான் ஆதரிப்பார் என எதிர்பார்த்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஹைவோல்ட் ஷாக் கொடுத்துள்ளார் அவர். ஆம், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் காலில் விழுந்தும் வணங்கி ஆசி பெற்றுள்ளார்.

யார் யார் ஆதரவு?
ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், மாஜி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் அதிமுக மாவட்டச் செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே முக்கியப் பிரமுகர்கள் இப்போது ஆதரவாக இருக்கிறார்கள். இதில் வெல்லமண்டி நடராஜனும், ராமச்சந்திரனும் எப்போது வேண்டுமானாலும் இபிஎஸ் பக்கம் அணி தாவலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாஜக ஆதரவு
பாஜக மூலம் அரசியலுக்கு அறிமுகமான மாஃபா பாண்டியராஜன் இன்று அதிமுககாரர் என்றாலும் கூட, பாஜகவில் மேலிடத் தொடர்புகளை இன்னும் தக்க வைத்திருக்கக் கூடியவர். பாஜக மேல்மட்டத் தலைவர்களின் விருப்பம் அறிந்து செயலாற்றக் கூடியவர் மாஃபா பாண்டியராஜன் என்ற பிம்பமும் அவருக்கு உண்டு. அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தபோது சமஸ்கிருதமும், தமிழும் இரு கண்கள் எனக் கூறி சமஸ்கிருதம் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தியவர்.

கிரீன் சிக்னல்
இன்று அவரே எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றிருக்கிறார் என்றால் நிச்சயம் அதற்கு பாஜக மேலிடம் கொடுத்த கிரீன் சிக்னலும் ஒரு காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதனிடைய ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக மேலிடத்தின் ஆதரவு இல்லை என்பதை தான் இது போன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

வாய்ப்பை நழுவவிட்டார்
ஒரு முறை இரண்டு முறை அல்ல மூன்று முறை முதலமைச்சர் பதவியிலும், நான்காண்டுகள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியிலும் அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வம், அந்தப் பதவிகளை கொண்டு தனக்கான தளகர்த்தர்களை கட்சியில் உருவாக்கத் தவறியதே இன்றைக்கு இத்தகைய தடுமாற்றத்திற்கு காரணமாகும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை சும்மாவா சொன்னார்கள் முதியோர்கள்.
-
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications