மின்வாரியத்துக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏன்? அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது ஏன்? தங்கமணி பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2018 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் 14 ஆயிரம் கோடி நஷ்டம் மட்டுமே ஏற்பட்டது என்றும் ஊழல் எதுவும் நடைபெறவில்லை, இதுகுறித்து எந்த இடத்திலும் பதில் கூறுவதற்கு தயாராக உள்ளதாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது:

தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு மின்சாரத்துறையில் 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று தணிக்கை துறை அறிக்கை வழங்கியுள்ளது ஆனால் அதில் ஊழல் நடந்து உள்ளது போல பொய்யான கருத்துக்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மின்சாரத்துறை மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு துறையாக மட்டுமே உள்ளது.

மின்சாரம் விலையேறவில்லை

மின்சாரம் விலையேறவில்லை


கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து பொருட்களும் விலையேற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இல்லாத அளவிற்கு மின்தடை இல்லாமல் மின்சாரம் வழங்கி உள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் மின்சார விலையேற்றம் இல்லை. பொதுமக்களுக்கு மாதம் மாதம் 100 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்கி வருகிறோம். இதனால் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டது.

நீண்ட கால ஒப்பந்தம்

நீண்ட கால ஒப்பந்தம்

மேலும் கடந்த 2 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் மட்டும் 2 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 11 லட்சம் குடிசைப்பகுதி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. நீண்டகால கொள்முதல் காரணத்தால் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று கூறி வருவது பொய். திமுக ஆட்சியில் இருந்த நேரத்தில் 31 ஆண்டுகள் வரை ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது.

நஷ்டம் ஏன்

நஷ்டம் ஏன்

தணிக்கை துறை சார்பாக 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக அறிக்கை வழங்கி இருந்தது. தணிக்கை துறை அனைத்து ஆட்சியிலும் இதனை இவ்வாறு செய்து இருந்தால் நஷ்டம் ஏற்பட்டு இருக்காது என்று கூறுவார்கள் ஆனால் தமிழகத்தில் சேவை செய்யக்கூடிய ஒரு துறையில் மக்களுக்கு தேவையை பூர்த்தி செய்யவே நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிகின்ற நேரத்தில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடன் இருந்தத 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் நேரத்தில் அந்த கடன் 45 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.

தங்கமணி விளக்கம்

தங்கமணி விளக்கம்

தற்போது இருக்கும் கடனில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு கடன் மட்டுமே. தமிழகத்தில் அந்த பணிகள் முடியும் நேரத்தில் அதன் மூலம் வருமானம் கிடைக்கும்" என்றார். 2015 ஆம் ஆண்டு 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மின்சாரம் உற்பத்தி செய்து வழங்க நிறுவனங்கள் தயாராக இருந்த நிலையில் 12 ரூபாய் 77 பைசாவிற்கு ஏன் ஒப்பந்தம் போடப்பட்டது என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தங்கமணி. அந்த நேரத்தில் மின் தட்டுப்பாடு இருந்த காரணத்தாலும் அதே போன்று குறைவான விலைக்கு ஒப்பந்தம் வழங்க தயாராக இருந்த நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு மட்டுமே வழங்க தயாராக இருந்ததாகவும் தமிழகத்தின் தேவை அதிகமாக இருந்த காரணத்தால் 1 ஆண்டிற்கு ஒப்பந்தம் போடப்பட்டது என்றும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+